பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கவர்ச்சிகரமாக அலங்கரிக்கப்பட்ட கம்பீரமான கற்பனைக் குதிரையில் அமர்ந்து செல்கிறார்கள். ஆனால் போய்த் திரும்புகிற பொழுது குதிரையில் இருந்து கீழே விழுந்து. கை ஒடிந்து, கால் ஒடிந்து, முகம் வீங்கித் திரும்பி வருகிறார்கள். பணபலம் உள்ளவர்கள் கீழான மதியினால் எல்லா முயற்சிகளிலும் இடைவிடாது, முனையிலேயே முறிந்து அழிந்து போகின்றார்கள். சந்தோசமாக ஆரம்பிக்கிற அவர்களது எந்த முயற்சியும், சலிப்போடுதான் முடிவடைகிறது. சந்தர்ப்பங்கள் எல்லாம் தலைகீழாக மாறி, அவற்றிற்கு விந்தையான வேதனைகள்தான் விளைவாகி விடுகிறது. அவர்களுக்கு வசதிகள் இருந்தும், வாய்ப்புக்கள் இருந்தும், சுற்றுப் புறத்தில் உள்ளவர்களின் உறவும், நட்பும் இருந்தும், அவர்களால் வாழ்க்கையில் நிலைத்திருக்க முடியவில்லை. இருப்பதைத் தொலைத்து விட்டே நிற்கிறார்கள். முகத்துக்கு எதிரேயே தாங்கள் விரும்பாதது நடக்கும் பொழுது மலைத்துப் போய்த் திகைக்கிறார்கள். தானே தனக்குப் பகைவன் என்பதுபோல் ஒரு பணக்காரனை அழிக்க, கெடுக்க வேறுயாருமே தேவையில்லை. அவனே அவனுக்கு வேண்டாதவனாகிறான். அவனே அவனுக்கு வெகுவான விரோதியாகிறான். இப்படியாகப் பணபலம் உள்ளவர்கள் பிறருக்கு உதவாமலேயே தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள்.