பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிமிர்ந்து நில் துணிந்து செல் 81 4. பதவி பலம் உள்ளவர்கள்: பதவி, அதிகாரம் - உத்தியோகம், ஆள் படை அம்புகளை வைத்துக் கொண்டு அட்டகாசமான ராஜரீகம். அரசு தயவு வகுத்த பதவியைப் பெற்றுக் கொண்டு அட்டகாசமாக வாழும் இந்த ஆட்களை நீங்கள் சந்தித்து இருக்கலாம். குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் இருந்தே வாழ்க்கையை அனுபவித்து விட வேண்டும், என்ற குறுகுறுப்பும், சிறு சிறுப்பும் அவர்களை ஏறமுடியாத மலைகளிலும் ஏறவைக்கிறது. எரிகின்ற நெருப்பிலே நிற்க வைக்கிறது. தன்சக்தி இவ்வளவுதான். பின்னணி இவ்வளவுதான் என்பதைத் தெரியாமலேயே இவர்கள் தாண்டிக் குதித்துத் தங்களைத் தாங்களே உதைத்துக் கொள்கிறார்கள். அதிக - காரம் இருக்கக்கூடாது என்பதால்தான் அதை அதிகாரம் என்கிறார்கள். வகிக்கின்ற ஆட்சி இடத்தைப் பதவியென்று பெருந்தன்மையோடு அழைத்தார்கள். அந்த வார்த்தைக்குள்ளே வைத்திருக் கும் ஜாலத்தை பார்த்தால், அந்த வார்த்தை எவ்வளவு என்று தெரியும். 'பத வி’ என்றும், பதவி என்ற சொற்களாக இந்த வார்த்தை பிரிகின்றது. பத வி' = என்றால், 'பத' பதமான, 'வி = அறிவான. பதமான அறிவோடு இருக்கிறவரை அது பதவியாக இருக்கிறது. அது கேட்கக் கொடுக்கின்ற காமதேனுவாக இருக்கிறது. அது நினைக்க, நினைக்க நெஞ்சத்தை நெய்வேத்யப் படுத்துகிறது. உற்சாகத்தை ஊட்டுகிறது. -