பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஆனால் பதவி என்று சொல் பயங்கர ஆயுதங்களுடன் புறப்பட்டு வருகிறது. 'ப' என்றால் புயலென்றும், 'தவி என்றால் அதில் தவிப்பது என்றும் பொருளாகும். பண்பான பதவியில் இருந்து கொண்டு புயலில் தவிக்கிற குயில்கள் போல. மரங்கள் போல. தாவரங்கள் போல. துன்பப்பட்டு அழிவார்கள் என்பதைக் குறிக்கவே பதவி என்ற சொல் பிறந்து இருக்கிறது. இராஜ்யத்தை ஆளுகின்றவனானக இருந்தாலும், மேன்மை அதிகாரியாக விளங்கினாலும், ஒரு குழுவிற்கு வழிநடத்துகிற மேலதிகாரியாக இருந்தாலும், தவறுகள் செய்கிறபோது தண்டிக்கப் படுகிறார்கள். பதவியில் இருந்தே அதிகாரியும், தான் நிற்கும் நிலையிலிருந்து கீழே இழுத்துவருவதால் சம நிலையை இழந்து சரிந்து வீழ்ந்து, சரித்திர சாதனையில் இழிவடைந்து தொலைந்து போகிறார்கள். ஆக பலம் உள்ள அறிவு, பலம் உள்ள உடல், பலம் உள்ள பணம், பலம் உள்ள பதவி, இந்த நான்கும் ஆண்டாண்டுகாலமாக மக்கள் மத்தியிலே இருந்தாலும். அவை எல்லாம் சமுதாயத்திற்கு உதவ வில்லையே என்கிற வருத்தங்கள் மக்களுக்கிடையே இருக்கத்தான் செய்கிறது. - இருந்தாலும் தனிப்பட்ட மனிதர்கள் தங்களுடைய சாதி, மதம், இனம், இவற்றால் வரும் ஏற்றத் தாழ்வு வயது வித்தியாசம், சுற்றுப் புறத்தாக்கங்கள் எல்லாவற்றையும் கடந்து, சாதனை படைத்து, சரித்திரத்தை உடைத்துப் புதிய வரலாறு படைத்திருக்கிறார்கள். அவர்களையும் நாம் பார்க்கிறோம்.