பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிமிர்ந்து நில் துணிந்து செல் - 87 மட்டுமல்லாமல் தன் கணவனுக்கும் கெளரவத்தைத் தேடித்தந்த அந்தத் தெய்வீகப் பெண்மணியின் சரித்திரம். கேட்பவரைக் கிளர்ந்தெழச்செய்யும். படிப்போரை இந்த வெற்றிப் பணியிலே வழிநடத்தும். 4. ஷேக்ஸ் பியர் நாடக மேடையிலே படுதாக்களை ஏற்றி இறக்குகிற பணியைச் செய்த ஷேக்ஸ் பியர், வசனங்களை நடிகர்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியராக மாறினார். ஒவ்வொரு நாளும் இரவில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் ஞானமாக மாறியது. வசனங்களை எழுத ஆரம்பித்தார். காதல் நாடகங்களை எழுதியவர் மனதிலே, ஏதோ ஒரு நெருடல் வெறும் காதல் நாடகங்களை மட்டும் எழுதினால் கால வெள்ளத்தில் கரைந்து காணாமல் போய் விடும் என்ற உண்மையைக் கண்டு பிடித்தார். மக்கள் மனதிலே பதிவது, தேசபக்தியும், தெய்வ பக்தியுந்தான் என்ற ஒருமுடிவுக்கு வந்தார். அதன் பிறகுதான் 'ஒத் தெல்லோ போன்ற நாடகங்களை எழுதினார். சிறந்த நாடக ஆசிரியராக. அந்த அனுபவங்கள் அவரை மாற்றின. - அவர் இங்கிலாந்து தேசத்தின் இலக்கியக் கதா நாயகன் ஆனார். அவரது அறிவு இலக்கிய உலகில் என்றும் நிலைத்து நிற்க ஆரம்பித்தன. ஒருவர் புகழ்பெற வேண்டும் என்றால் முதலில் தன்னை யாரென்று புரிந்து கொள்ள வேண்டும். தனக்குறிய திறமை (Talent) என்ன என்பது தெரிந்து