பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


88 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கொண்டாக வேண்டும். பிறகு அந்தத் திறமையைத் தன்னால் வளர்த்துக் கொள்ள முடியுமா என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பணிக்குள்ளே தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். - தான் வளர்த்துக் கொள்கிற திறமை இந்த சமுதாயத்துக்குப் பயன்படுமா என்பதையும் நேர்செய்து பார்க்கவேண்டும். திறமையை எப்படிப் பயன் படுத்தினால் இந்த சமுதாயம் ஏற்றுக் கொண்டு பாராட்டும் என்பதையும் சிந்திக்க வேண்டும். ஒரு காரியம் செய்தாலும், அது புதுக் காரியமாக அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படி எல்லாம் சமயம் பார்த்து, சமயம் பார்த்து சமுதாயத்தை சந்தோசப்படுத்தியவர்களே வாழ்க்கையில் புகழோடு வாழ்கிறார்கள். வளமான பெயருடன் சரித்திரத்தில் வாழ்கிறார்கள்.