பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிமிர்ந்து நில் துணிந்து செல் 89 10. உலக சாதனை புரிய உரிய பயிற்சி முறைகள் இலட்சியம் ஒலிம்பிக் பந்தயத்தின் முக்கிய குறிக்கோள், - முதன்மை மிக்க இலட்சியச் சொற்கள் விரைக, உயர்க, வலிமை பெறுக என்பது தான். ஓட்டத்தில் வேகமும், தாண்டலில் உயரமும், எறிவதில் தூரமும் மிகுதியாகிக் கொண்டே இருக்க வேண்டும். அந்த மேன்மை மிக்க சாதனைகளை, உலக வீரர்களும் வீராங்கனைகளும் நிகழ்த்திக் கொண்டே யிருக்கவேண்டும் என்ற நம்பிக்கையில்தான் அத்தகைய இலட்சியச் சொற்கள் இயம்பப் பட்டன. அந்த வகையிலே, உலக சாதனைகளை உயர்த்து வதில் தனக்குத்தானே நிகர், இந்தத் தரணியில் வேறு யாரும் இல்லை என்று தெளிவாக சாதிக்கும் ஒரு வீரனின் பயிற்சி முறைகளை இங்கு அறிந்து கொள்ள இருக்கிறோம். கோல் ஊன்றித் தாண்டுதல் ஓட்டமென்றால் ஓட்டம்தான். உதவி சாதனம் இல்லை. தாண்டல் என்றால் தாண்டுதல்தான். உதவி சாதனம் இல்லை. கோல் ஊன்றித் தாண்டல் என்னும் நிகழ்ச்சியில், ஒரு நீண்ட கோலினைத் தூக்கிக் கொண்டே, உயரே தாண்டுகின்ற கடுமையான முறை இருக்கிறது. -