பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


92 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா முதல் நாள்: உடலைப் பதப்படுத்துகிற பயிற்சி முறைகள். 1200 மீட்டர் தூரத்தை பலமுறை ஒடிப் பழகுதல். ஒரு ஓட்டத்திற்கும் மறு ஓட்டத்திற்கும் இடையில் குறைந்த இடைவேளை நேரம் வைத்துக் கொள்ளுதல். அதனைத் தொடர்ந்து, கால் தசைகள் வலிமை பெறுவதற்காக, உயர்வான பகுதியில் மேல் நோக்கி ஓடுதல், குதித்துக் குதித்து ஓடுதல். பயிற்சி நேரத்தின்போது, களைப்படைந்து போய் விடக் கூடாது என்பதற்காக, பயிற்சிகளை மாற்றி மாற்றி செய்தல். - அதன் பின்னர் எடைப் பயிற்சிகளைச் செய்தல், தோள் பகுதியில் எடை ஏந்தியில் (Bar bell) 80 கிலோ எடைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்து எழுதல்; நின்ற இடத்திலே ஓடுதல் அதைத் தலைக்கு மேலே உயர்த்தி இறக்குதல். * அதன் பிறகு 100 மீட்டர் தூரத்தை 4 தடவை விரைவாக ஓடிப் பழகுதல். இப்படியாக முதல் நாள் உடலைப் பதப்படுத்தும் முறைகள் முடிகின்றன. - இரண்டாம் நாள்: பதப்படுத்தும் பயிற்சி முறைகளில், இன்னும் சற்று ஆழமான பயிற்சிகளில் ஈடுபடுதல்.