பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா என்று பேசுகிற இந்த உலக சாதனை மன்னன் செர்ஜி பியூப்கா, யாரும் வெல்ல முடியாத நிலையில் உயர்ந்திருந்தாலும், பயிற்சிகளை மறக்காமல், வெறுக்காமல் செய்து வருகிறார். அவரது சரித்திரம் நம் நாட்டு வீரர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தால், அதுவே நம் பாரதத்திற்கு வெற்றியை வழங்கும். நல்ல தூண்டுகோலாக இருக்கும். குறிப்பு: * ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சியில் உலக சாதனை. புரிகிற ஒவ்வொரு வீரனும் வீராங்கனையும், தினம் தினம் அயராமல் ஓடியும் தாண்டியும் எடைகள் தூக்கியும் ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சிகள் செய்தும், சலிக்காமல் தொடர்ந்த காரணத்தால் தான். உயர்ந்த வெற்றியைப் பெற முடிந்தது. பயிற்சி செய்ய சோம்பல் படுகிறவன் உயரவே முடியாது. கடுமையான பயிற்சிகளைக் கண்டு கலங்கிப் பின் வாங்குகிறவன், வெற்றி பெறவே முடியாது. உலக சாதனை என்பது உலகத்தின் சிறந்த பீடம் அல்லவா! அதற்கு நீங்கள் தகுதியாகி ஏறி அமர்ந்து, பெரும் புகழ் பெற வேண்டுமானால். நீங்கள் தேர்ந்தெடுக்கிற நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற பயிற்சிகளைச் செய்யுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும். நீடித்த புகழும் கிடைக்கும்.