பக்கம்:நிலாப்பாட்டி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரவிலே குருவியின் பாட்டைக் கேட்டுக் கொண்டே கிழவி தூங்கப் போவாள்.

இப்படிச் சிலகாலம் சென்றது. அதற்குள்ளே கிழவி மிகவும் தளர்ந்து போய்விட்டாள். முதுமையினாலே அவள் கைகால்கள் ஓய்ந்துவிட்டன. அவளால் ராட்டை சுற்றக்கூட முடியவில்லை. அதனால் உணவுப்பொருள் வாங்குவதற்குக் காசு, பணம் ஒன்றும் இல்லை. சில நாள் அவள் பட்டினியாகவே கிடக்க நேரிட்டது. சில நாளைக்குக் குடிசையைச் சுற்றி முளைத்திருக்கும் கீரைகளைப் பிடுங்கி, வேக வைத்துச் சாப்பிட்டு ஒருவாறு பசியைத் தணித்துக்கொள்ளுவாள். சில நாளைக்கு அதுவும் கிடைக்காது.

அவள் யாரிடத்திலும் தனது நிலைமையைப் பற்றிச் சொல்லவில்லை. இனிமேல் நான் உயிரோடிருந்து யாருக்கு என்ன பயன்? பிறரிடத்திலே உதவி பெற்று வாழ்வது இழிவானது' என்று நினைத்துக்கொண்டு பேசாமல் படுத்திருப்பாள்.

குருவிக்கு அவள் நிலைமையைப் பார்த்து மனம் பொறுக்கவில்லை. அதற்கு அழுகையாக வந்தது. நிலாப்பாட்டி பசியோடு படுத்திருந்தால் இதுவும் அவள் பக்கத்திலே போய்ப் படுத்துக்கொள்ளும்; இரை தேடப் போகாது. கிழவி அதை அன்போடு நீவிக் கொடுத்துவிட்டு, "நீ போய் இரை தேடிச் சாப்பிட்டு வாடா, கண்ணு, எனக்காக நீ பட்டினியாகக் கிடக்காதே. உன்னைப் பார்த்தும் உன்னுடைய பாட்டைக்

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்பாட்டி.pdf/11&oldid=1117025" இலிருந்து மீள்விக்கப்பட்டது