உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிலாப்பாட்டி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிலாப்பாட்டிக்கு அந்தக் குருவியின் அன்பெல்லாம் புரிந்துவிட்டது. தான் பட்டினி கிடக்கக்கூடாது என்பதற்காகக் குருவி எங்கிருந்தோ அந்தத் தங்கக் காசைக் கொண்டு வந்திருப்பதை அவள் அறிந்துகொண்டாள். அதைக் கொண்டுபோய்க் கடையில் மாற்றி உணவுப் பொருள்கள் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது குருவியின் ஆசை என்பதையும் தெரிந்துகொண்டாள். அவளுக்குக் குருவியின் மேல் இன்னும் அன்பு அதிகமாயிற்று.

ஆனால், நிலாப்பாட்டி அந்தத் தங்கக்காசைத் தனக்காக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்பாட்டி.pdf/15&oldid=1117030" இலிருந்து மீள்விக்கப்பட்டது