பக்கம்:நிலாப்பாட்டி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இப்படியிருக்க, சில நாட்களாக உண்டியை நாள் தோறும் இரவிலே திறந்து பார்க்கும்போது, அதிலே வெள்ளியாலும் செம்பாலும் செய்த நாணயங்களோடு ஒரு தங்கக்காசும் இருப்பதைப் பார்த்து அரசன் ஆச்சரியமடைந்தான். ஒவ் வொரு நாளும் யார் இப்படித் தங்கக் காசு போடுகிறவர்கள் என்று கண்டுபிடிக்க வேண்டு மென்று அரசனுக்கு ஆசையுண்டாயிற்று. அதற்காகச் சில ஆட்களை நியமித்து, மறைவாக இருந்து, உண்டியில் பணம் போடுகிறவர்களைக் கவனிக்கும்படி அவன் ஏற்பாடு செய்தான்.

நிலாப்பாட்டியால் ஒரு நாள் நடக்கக்கூட முடியவில்லை. பட்டினியாகக் கிடப்பதால் கை கால்கள் ஓய்ந்துபோய்விட்டன. இருந்தாலும் அவள் மனம் தளரவில்லை. அன்று குருவி கொண்டுவந்த தங்கக் காசை உண்டியில் போடுவதற்காக அவள் புறப்பட்டாள். பசி மயக்கத்தால் தலை சுற்றத் தொடங்கியது. கால்கள் தள்ளாடின. அதனல் அவள் உட்கார்ந்த நிலையிலேயே, கால்களையும் கைகளையும் மெதுவாக முன்னால் தரைமீது வைத்து வைத்துக் கோவிலுக்குப் போனாள். உடம்பில் ஏற்பட்டுள்ள தளர்ச்சியையும், வலியையும் பொறுத்துக் கொண்டு, மெதுவாகக் கோவிலை அடைந்து, அந்தத் தங்கக் காசை உண்டியிலே போட்டுவிட வேண்டும் என்று அவளுக்கு ஆசை. கோவிலை அடைந்ததும் அவளுக்கு சந்தோஷம் உண்டாகி விட்டது. நல்லதொரு திட்டத்திற்கு உதவி

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்பாட்டி.pdf/19&oldid=1117037" இலிருந்து மீள்விக்கப்பட்டது