இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தெரியாமல் வளர்த்து வந்தார்கள். அவனுக்கும் தான் அரச குமாரன் என்பது தெரியாது. அவனுக்கு இருபது வயதான போதுதான் அவனிடம் உண்மையைச் சொன்னார்கள். அவன் உடனே ஒரு சேனையைத் திரட்டி வந்து, பகைவர்களை எதிர்த்துப் போரிட்டு, அவர்களை ஊரைவிட்டு விரட்டியடித்தான். அவனே அரசனும் ஆனான். மக்களெல்லாம் அவனுடைய வீரத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்கள்.
இப்படிப்பட்ட வீரனான அந்த அரசன், மறுநாள் காலையில் நிலாப்பாட்டியைத் தேடிக் கொண்டு அவளுடைய குடிசைக்கே வந்து விட்டான். “பாட்டீ, உனக்கு இந்தத் தங்கக்காசு ஏது ? எதற்காக இதை உண்டியில் நாள் தோறும் போடுகிறாய்?” என்று அவன் கேட்டான் .
நிலாப்பாட்டிக்கு அரசனைப் பார்த்ததும் முதலில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவள் குற்றமொன்றும் செய்யாதவளாகையால் அவளுடைய பயம் விரைவில் நீங்கி
19