இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மிகவும் வயசான கிழவி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. சொந்தக்காரர்களும் இல்லை.
அவள் தனியாக ஒரு சின்னக் குடிசையிலே வசித்து வந்தாள்.
அந்தக் கிழவி யாருடைய வீட்டிற்கும் போக மாட்டாள். யாரும் அவள் வீட்டிற்கு வரவும் மாட்டார்கள். அருகிலேயுள்ள வீட்டுக் குழந்தைகளெல்லாம் அந்தக் கிழவியை நிலாப்பாட்டி என்று கூப்பிடுவார்கள். நிலாவுக்குள்ளே யாரோ ஒரு
3