பக்கம்:நிலாப்பாட்டி.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிழவி, ராட்டையில் நூல் நூற்றுக்கொண்டிருக்கிறது போலத் தெரிகிறதல்லவா? அவளைப் போல அந்தக் கிழவியும் எப்பொழுது பார்த்தாலும் ராட்டையிலே நூல் நூற்றுக்கொண்டிருப்பாள். அதனால் அவளை நிலாப்பாட்டி என்று குழந்தைகள் கூப்பிட்டார்கள். அந்தப் பேராலேயே எல்லாரும் அவளைக் கூப்பிடத் தொடங்கி விட்டார்கள். குழந்தைகள் வைத்த பெயரே அவளுக்கு நிலைத்துப் போய்விட்டது.

அவளுடைய உண்மையான பெயர் யாருக்குமே தெரியாது. ஏனென்றால், அவள் யாரிடமும் அதிகமாகப் பழகுவதும் இல்லை: பேசுவதும் இல்லை. அவள் சதா நூல் நூற்றுக் கொண்டே இருப்பாள். அந்தக் காலத்திலே எந்திரங்கள் இல்லை. ராட்டையால் நூல் நூற்று, அந்த நூலைக்கொண்டுதான் துணி நெய்வார்கள். கிழவி நூல் நூற்று, அதைத் துணி நெய்பவர்களுக்கு விற்று, அதில் கிடைக்கும் கொஞ்சம் பணத்தைக்கொண்டு உணவுப் பொருள் வாங்கி, வயிறு வளர்த்து வந்தாள். அவளால் கஷ்டப்பட்டு வேறு வேலை செய்ய முடியாது. வயதாகி விட்டதால் உடம்பிலே அத்தனை வலுவில்லை.

ஒருநாள் மாலையிலே நிலாப்பாட்டி நூல் நூற்று விட்டுப் பிறகு அடுப்புப் பற்றவைப்ப தற்குக் கொஞ்சம் சுள்ளி எடுத்து வருவதற்காகக் குடிசையைவிட்டு வெளியே வந்தாள். அந்தச் சமயத்திலே, அழகான குருவி ஒன்று பயந்து அலறிக்கொண்டு அவள் பாதத்தின் அருகிலே வந்து விழுந்தது. அதன்மேலே பச்சை, சிவப்பு,

4