பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழை கண்ட மயில் மழைகண்ட மயில்போலென் உள்ளம் வளர்எண்ண மெனும்வண்ணம் பலவும் தழைநீலம் ஒளிர்தோகை வானில் தடையின்றித் திசைதோறும் விரிய நாதனவன் தரிசனமே நாடி நடனங்கள் பரவசமாய் ஆடும்; காதலனை இதுகாறும் காணேன், காணுவேன் என்ருடும் உள்ளம், கருமேகம் ககனமிசை உருமிக் காரிடியும் பேரிடியும் செய்யும்; விரைமின்னல் கொடிமின்னல் மழையும் வெளியெங்கும் நூரைகூடப் பெய்யும்: அன்பெனுநல் வெண்புறவு கூட்டில் அஞ்சியே நாவிழந் தடையும்; துன்பவொலி செவிகுடையும் தவளை, சோர்வுரு தாடுமென் உள்ளம். {தாகூரின் கவிதை ஒன்றைத் தழுவியது.} 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/58&oldid=791749" இலிருந்து மீள்விக்கப்பட்டது