பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒடக்காரன் சுவையிலா இன்பம் சுவையெனக் கொள்ளேல்.” "தத்தளித் தோடம் தளர்ந்ததே, ஐயகோ! மெத்தவும் பயந்தேன் வேறினிச் செய்வதென்? "ஊன்றுகோல் என்றன உறுதியாய்ப்பற்றுவாய்.” 'ஈன்றதாய் போலவே என்னையும் காத்து அன்புடன் ஒடம் செலுத்திடும் ஐயனே, உன்னுடை வாழ்க்கை உரைப்பாய் எனக்கே: உற்ருர் உறவினர் ஊருடன் பேரும் நற்ருய் தந்தையர் நலம்பிற வெல்லாம் அறிந்திடப் பெரிதும் ஆர்வமாய் உள்ளேன்.” "மறந்தன என்னை நீ ; மற்றுமோர் ஊரும் பேரும் எனக்கிலே; பித்தராய்ப் பலரும் ஊருடன் பேரும் ஒன்றல. இரண்டல ஆயிரம் கூறுவர்; அவையெலாம் பொய்யே.” "தாயும் தந்தையும் சாற்றிட வில்லையே?” "என்னைப் பெற்ருேர் யாருமே என்றுமே யானும் பிறந்ததும் இ. 'பித்தமோ விகடப் பேச்சிதோ அறியேன் கைத்தலம் பிடித்த காதலி யாரோ?” "பித்தனே யானும் ; பெண்மணி நீயென் உத்தமக் காதலி உணர்ந்திலே இன்னுமோ? 'கரத்தினை மெல்லவே தீண்டிய கனத்தில் வருத்திய இருள்திரை மாயமாய் விலகிட ஒடமும் யாறும் ஒன்றையும் கானேன்; 77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/77&oldid=791791" இலிருந்து மீள்விக்கப்பட்டது