பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாற்றாக உங்க மாடு குட்டி போட்டிருக்கா? என்ன குட்டி ஈனியிருக்கு? என்ற தன்மையில் பேசுவாளாம். 1930களில் நகைச்சுவைக் கதை கட்டுரைகள் எழுதியவர்கள் சமூகத்தில் பெண்களிடையே நிலவிய இந்த வழக்கத்தை பரிகாசத் தொனியோடு எழுதியுள்ளனர். பெண்கள் கல்வியறிவும், உரிமை உணர்வும் பெற்று வளர்ச்சி பெறப்பெற, காலப்போக்கில் இந்தப் பழக்கம் குறைந்து மறைந்து வழக்கில் இல்லாமலே போய்விட்டது. கணவன் மற்றும் மரியாதைக்கு உரிய மூத்தவர்களின் பெயர்களை தாராளமாக உச்சரிக்கும் பழக்கம் நடைமுறைக்கு வந்துவிட்டது. காலவேகத்தில், நாகரிகமுதிர்ச்சியில், ஆணும் பெண்ணும் சமம் என்ற உரிமையில் கணவனை பெயர் சொல்லி அழைக்கும் மனைவியரும் தோன்றிவிட்டார்கள். எல்லாம் 'வழுவல கால வகையினானே! நாங்கள் திருநெல்வேலியில் வசித்த வருடத்திலேயே, சித்தப்பா மகள் முத்தம்மாள் அக்காளுக்குத் திருமணம் நிகழ்ந்தது. மணமகன் ராஜவல்லி புரத்தை சேர்ந்தவர். எங்களுக்கு மாமா முறை உள்ள ஒரு பெரிய வீட்டுக்காரரின் மூத்தமகன். கல்யாணம் ராஜவல்லிபுரத்தில் நடந்தது. திருநெல்வேலி பெண்வீட்டில் மறுவிடு விசேஷம், கல்யாணம் போலவே, விமரிசையாக நடைபெற்றது. அதில் அம்மா முக்கிய பங்கேற்றுச் செயல் புரிந்தாள். விசேஷமாகக் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகள் எதுவும் இன்றி எங்கள் திருநெல்வேலி வாசம் முடிவுக்கு வந்தது. குறிப்பிடத் தக்கது என்று வேணுப்பிள்ளை - நாங்கள் வசித்த வளைவில் முதலாவதாக இருந்த பெரிய விட்டுக்காரர் - சென்னையி லிருந்து வரவழைத்த சுவர்க்கடியாரம் வந்திறங்கியதை சொல்லலாம். அந்தக் காலத்தில் அபூர்வமாக சில வீடுகளிலேயே சுவர்க் கடியாரம் இருந்தது. வசதிபடைத்த வேணுப்பிள்ளையும் பெரிய கடியாரம் ஒன்று வாங்க விரும்பினார். பத்திரிகையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, சென்னை கம்பெனிக்கு பணம் அனுப்பி ஆர்டர் செய்தார். அந்நாளில் அந்தக் கடியாரத்தின் விலை ஐந்து ரூபாய் தான். ஐந்து ரூபாய் என்பதே பெரும் தொகை தான் மிகப் பலருக்கு ஒருநாள் பார்சல் வந்து சேர்ந்தது. சாதிக்காப் பெட்டியில் பத்திரமாக வைத்து நன்கு துண்டு துணுக்குத் தாள்களில் பொதிந்து நிலைபெற்ற நினைவுகள் 3; 103