பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யனும் என்று வழிகாட்டுவார். நாங்கள் நால்வரும் முறைப்படி எல்லாம் செய்வோம் தட்சணையாக பணம் வழங்கிக் கொண்டேயிருக்க வேண்டும் முடிவில் மாவுப் பிண்டங்கள், தர்ப்பை மலர்கள் முதலியவற்றை அவை வைக்கப்பட்டிருந்த இலையோடு சுருட்டி மடக்கி, கும்பாவில் வைத்து பெரிய அண்ணனிடம் கொடுப்பார். இதை கொண்டு போய் வாய்க்காலில் கரைத்து விட்டு வா என்று சொல்லி அனுப்புவார். பச்சரிசி மற்றும் பொருள்கள் நிறைந்த மூன்று இலைகளும் அவருக்கு அரிசி, காய்கறி வகைகள் மற்றும் பொருள்களை எடுத்துச் செல்வதற்காக அவர் தனித்தனிப் பைகள் கொண்டு வந்திருப்பார். முறைப்படி பிரித்து அவற்றை பைகளில் கொட்டி எடுத்துக் கொண்டு, தட்சனைப் பணத்தை பத்திரமாக இடுப்பு வேட்டியில் சொருகிக் கொண்டு, விடைபெற்றுச் செல்வார். இப்படியாக வருடம் முழுவதும் அவருக்கு நல்ல வரும்படி ஆண்டு நிறைவுற்றதும், ஆட்டத் திதி (முதல் ஆண்டுத் திவசம்) வெகு ஆர்ப்பாட்டமாகச் செய்யப்பட்டது. ஊரிலிருந்து பெரியப்பாவும் முக்கிதமான சிலரும் வந்திருந்து கவனித்துக் கொண்டார்கள். எணார்பேட்டை (தாமிரவர்ணி) ஆற்றில், பேராய்ச்சி அம்மன் கே. ல் துறையை ஒட்டிய தோப்பில் சடங்குகள் முறைப்படி நடைபெற்றன. மூன்று அய்யர்களுக்கு ஏகப்பட்ட சாமான்கள் (பித்தளைத் தம்ளர், குடை, கைத்தடி இப்படி என்னென்னவோ) இலைகளில் படைக்கப்பட்டு, அரிசி பல படி மற்றும் காய்கறி வகைகள், நவதானியம் ஆகியவற்றோடு தானம் வழங்கப்பட்டன. அந்த ஒரு திவசத்துக்கே பணம் தண்ணிராக வாரி இறைக்கப்பட்டது என்று தான் சொல்லவேண்டும். இறந்துபோன ஆத்மா திருப்தி அடைகி வேண்டும்; அப்பதான் குடும்பத்துக்கு நலம் விளையும் என்று சொல்லப்பட்டது. அம்மாவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை அதிகம். ஆகவே, கணக்குப் பார்க்காமல் செலவு செய்தாள். செலவுகளுக்குப் பணத்துக்காக நகைகள் விற்கப்பட்டன. வண்டியும் மாடுகளும் அப்பா இறப்பதற்கு முன்பே விற்பனையாகியிருந்தன. அவ்வப்போது கடன் வாங்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. 110 88 வல்லிக்கண்ணன்