பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பா இறந்த சமயம் எனக்கு வயத பத்து, முதலாவது பாரம் (ஆறாம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்தேன். அண்ணன் கோமதி நாயகம் மூன்றாவது பாரம் கல்யாணி அண்ணனும் மூன்றாவது பாரம்தான். ஆனால் வேறு பிரிவு (செக்ஷன்) சில மாதங்களிலேயே, நமக்கு இனிமேல் இவ்வளவு பெரிய வீடு வேண்டாம். வாடகை ரூபாய் பதினாலு மாதாமாதம் இப்படி வாடகை ஏன் கொடுக்க வேண்டும்? குறைந்த வாடகை உள்ள வேறு வீடு பார்த்துப் போகலாம் என்று அம்மா முடிவுசெய்தாள். பத்து ரூபாய் வாடகையில் ஒரு வீடு கிடைத்தது. கோபாலசாமி கோயில் வடக்கு ரதவீதியிலேயே இருந்தது அது சுமாரான வசதிகள் கொண்டது. மதுரையாள் வீடு என்று அதற்குப் பெயர். மதுரை யிலிருந்து வந்து பாளையங்கோட்டையில் வசித்த ஒரு பெண்ணுக்குச் சொந்தமான வீடு அது கணவன் வழியில் வந்த சொத்து. ஒரு வளைவு. (காம்பவுண்ட்), மூன்று வீடுகள் இருந்தன. முதலாவது வீடு சிறியது. அதில் வீட்டுக்காரி வசித்தாள். அவள் விதவை. வெள்ளை வெறேரெனப் பளிச்சிடும் மல் துணிச்சேலை அணிந்திருப்பாள். நடத்தை மோசமானவள் என்று அவள் பெயர் பெற்றிருந்தாள். இரண்டாவது வீடு தான் எங்களுக்கு வாடகைக்கு விடப் பட்டிருந்தது. மூன்றாவது வீட்டில் புகையிலைக் கடை வியாபாரியான படப்பகுறிச்சி இசக்கியா பிள்ளையின் குடும்பம் வசித்து அமைதியான சூழல் தான். எவராலும் யாருக்கும் தொந்தரவு இருந்ததில்லை. அந்த வீட்டிலும் ஒரு வருடம் தான் வசித்தோம். அதை விடப் பெரிய வசதியான வீடு, அதே வாடகையில் கிடைத்ததால், நாங்கள் மறுபடியும் வீடு மாறினோம். இவ் வீடு கோபாலசாமி கோயில் கீழ ரதவீதியில் இருந்தது. வளைவு சேர்ந்த வீடு தான். முதலாவது சிறிய வீட்டில் சாதாரணக் குடும்பம் ஒன்று குடியிருந்தது. இரண்டாவது நடுவிட்டில், வியாபாரி வைகுண்டம் பிள்ளை, அவர் மனைவி மற்றும் தாயார், திருமண மாகாத தம்பி ஆகிய நாலு பேர் வசித்தார்கள். மூன்றாவது வீடு எங்களுக்குக் கிடைத்தது. கீழ்ப்பகுதியில் மூன்று கட்டுகள். இடையில், மூன்று வீட்டுக்கும் பொதுவான திறந்தவெளி முற்றம் செங்கல் தரை. எதிரே ஒரு கூடம் நிலைபெற்ற நினைவுகள் $ 111