பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலே வசதியான மச்சு சில அறைகளைக் கொண்டது. ஆகவே, புழங்குவதற்கு தாராளமான இடம் கொண்டிருந்தது அந்த வீடு கால ஓட்டத்தில் பல சுவாரசியமான மனிதர்களையும் வேடிக்கை நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்தக் கூடிய அரங்கமாகவும் அது அமைந்திருந்தது. நான் இரண்டாவது பாரம் (ஏழாம் வகுப்பு) வந்திருந்தேன். அண்ணன் கோமதிநாயகம் நான்காவது பாரம் கல்யாணி அண்ணன் மூன்றாவது பாரத்தில் தேர்ச்சி பெறவில்லை. அந்த வருடமும் அதே வகுப்பில் தான் படிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதனால் அண்ணன் படிப்பைத் தொடர விரும்பவில்லை. படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு வீட்டிலேயே இருந்தான். அந்தத் தெருவில் வசித்த பெரிய பையன்கள் சிலர் பெரிய அண்ணனுக்கு சிநேகிதரானார்கள். சிலர் படித்துக் கொண்டிருந்தார்கள். படிக்காமல் வீட்டோடிருந்து வெட்டிப் பொழுது போக்குவோரும் இருந்தனர். எல்லோருமே நன்கு வளர்ந்தவர்கள். வீட்டுக்கு அடங்காத பிள்ளைகள் தெருத்திண்ணைகளில் எந்த வீட்டுத் திண்ணையானாலும் சரிதான் - அமர்ந்து வம்பளத்து ஜாலியாகப் பொழுதுபோக்குவதில் சுகம் கண்டவர்கள். சீட்டு ஆடுவதிலும் அவர்களுக்கு ஈடுபாடு இருந்தது. பெரிய அண்ணன் நண்பனாகச் சேர்ந்ததனால், எங்கள் வீட்டுத் திண்ணையும் அவர்களுக்கு பொழுது போக்கும் இடம் ஆயிற்று. மெதுமெதுவாக எங்கள் வீட்டு மாடி அவர்கள் சீட்டாடுவதற்கும் சோம்பிக்கிடப்பதற்கும் சவுகரியமான இடமாக அமைந்தது. அவர்களில் குற்றாலம் என்றொரு மாணவன். நான்காவது பாரம் படித்துக் கொண்டிருந்தான். தமாஷாகப் பேசியும், தெருவில் போகிறவர்கள் வருகிறவர்களை கிண்டல் பண்ணியும் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான். குற்றாலம் பிள்ளை என்று தான் மற்றவர்கள் அவனை குறிப்பிடுவார்கள். ஒருநாள் அவன், இன்னிக்கு ராத்திரி ராப்பாடி வேசம் போட்டு எல்லோரையும் எமாற்றலாம் என்று திட்டம் தீட்டினான். நண்பர்கள் அவனுக்கு தூபம் போட்டார்கள். ராப்பாடி என்பவன் ராப்பிச்சைக்காரன். சுடலையிலிருந்து (சுடுகாடு இரவு பன்னிரண்டு மணிக்கு புறப்பட்டு வருவதாகச் 112 : வல்லிக்கண்ணன்