பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வார்கள். புரத வண்ணான் என்ற (வண்ணார்களுக்கு உடை வெளுத்து, ஏவல்கள் செய்யும்) மிகத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவன் தான் ராப்பாடியாக பாட்டை நீட்டி முழக்கியபடி, பிச்சை எடுக்க வருவது வழக்கம் அவன் முகத்தில் யாரும் விழிக்கக் கூடாது; விழித்தால் கேடு வரும் என்று ஜனங்கள் நம்பினார்கள். அதனால் அவன் பகல் நேரத்தில் வெளியே வருவதில்லை. வரக்கூடாது என்று சமூகக் கட்டுப்பாடு இருந்தது. இரவில் கூட அவனை யாரும் பார்க்க விரும்புவதில்லை. அவன் தீப்பந்தம் ஒன்றை எரியவிட்டபடி, மணியை அடித்துக் கொண்டு, பயமுறுத்தும் பாடல்களைப் பாடியவாறு தெருவோடு வருவான். அவனோடு துணைக்கு ஒருவன் வருவான். அய்யா... சாமி, அம்மா - தாயே! ராப்பாடிக்கு பிச்சை போடுங்கோ ராப்பாடி தர்மம் தாயே என்று கூவியபடி அந்த ஆள் வருவான். பெரிய பெட்டி ஒன்றும், சாக்கும் வைத்திருப்பான். ஒவ்வொரு வீட்டிலும், ராப்பாடியின் பாட்டுச் சத்தத்தையும் மணியோசையையும் கேட்டதுமே, பெண்கள் எழுந்து ஒரு சொளகில் (சுளகு முறம்) கொஞ்சம் அரிசி எடுத்து வந்து, தலைவாசல் கதவை சிறிதே திறந்து, தெருப்படியில் அதை வைத்துவிட்டு உள்ளே மறைந்துவிடுவார்கள். ராப்பாடியின் துணை ஆள் வீடுதோறும் வந்து, சொளகில் இருக்கிற அரிசியை பெட்டியில் தட்டிக்கொள்வான். பதிலுக்கு திருநீறு (சாம்பல்) எடுத்து சொளகில் வைத்துவிட்டு நகர்வான். ராப்பாடி இரண்டு வீடுகள் கடந்து சென்றதும், வீட்டுக்காரி சொளகை எடுத்துக் கொண்டு கதவை சாத்தி தாளிட்டுவிட்டு உள்ளே போய் விடுவாள். இந்த வழக்கம் இருந்ததனால், எளிதில் அரிசி சேகரித்து விடலாம் என்று குற்றாலம் கூறினான். அவன் ராப்பாடியாகவும் நண்பன் ஒருவன் துணையாள் ஆகவும் செல்வது என்று முடிவாயிற்று. அதே போல அன்று இரவு பதினோரு மணிக்குமேல் குற்றாலமும் துணைவனும் கிளம்பினார்கள். மற்றும் சில நண்பர்கள் ஒதுங்கி நின்று, நடப்பதை கவனிக்கச் சித்தமானார்கள். ಅbDTಖರ இடுப்பு வேட்டியை அவிழ்த்து உயர்த்தி, லாட சந்நியாசி மாதிரிதுக்கிக்கட்டி வேட்டியின் முனைகளை கழுத்தைச் சுற்றி நன்றாக முடிச்சுப் போட்டுக்கொண்டான். அந்தத் தெரு அம்மன் கோயில் நிலைபெற்ற நினைவுகள் 3; 113