பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணையாள், அம்மா தாயே, ராப்பாடி பிச்சை போடுங்கோ என்று கத்தினான். வீடுகளில் கதவுகள் மெது மெதுவாகத் திறக்கப்பட்டன. ஒருக்களித்த கதவின் இடைவெளி வழியாக சொளகுகள் தலை காட்டின. கதவுகள் சாத்திக் கொண்டன. துணைவன் ஒவ்வொரு வீட்டின் வாசல்படியிலும் வைக்கப்பட்ட சொளகில் இருந்த அரிசியை பெட்டியில் தட்டிக் கொண்டு, சொளகில் திருநீறு வைத்து விட்டு நகர்ந்தான். இவ்வாறாக இரண்டு பேரும் வெற்றிகரமாக அந்த வீதியில் நடந்து, கணிசமான அளவு அரிசி சேகரம் செய்துவிட்டார்கள். அந்தத் தெரு முடிவுற்றதும், இது போதும் என்று குற்றாலம் சொல்லவும், தீப்பந்தம் அணைக்கப்பட்டது. அவரவர் வேசத்தை கலைத்து, வேட்டியை சரியாக உடுத்திக் கொண்டு, வேறு தெரு வழியாக வேகமாக நடந்து சென்றார்கள். ஒரு இடத்தில் இதர நண்பர்களும் வந்து சேர்ந்து கொண்டார்கள். இவ்வளவு அரிசி சேர்ந்திட்டுதே! இதை என்ன செய்யலாம் என்று கேட்டான் துணை ஆள். கடையிலே கொடுத்து காசு வாங்குவோம். அந்தப் பணத்துக்கு ஏதாவது வாங்கிச் சாப்பிடலாம் என்றான் ஒருவன். அதை காலையிலே யோசிக்கலாம். இப்ப அவரவர் வீட்டுக்குப் போவோம். அரிசிப் பெட்டி என்கிட்டேயே இருக்கட்டும் என்று குற்றாலம் சொல்லவும், அனைவரும் அதை ஏற்றுக் கொண்டார்கள் மறுநாள் காலையில் குற்றாலம் வந்து, அரிசிப்பெட்டி கல்யாணி வீட்டில் இருக்கட்டும் நல்ல பாதுகாப்பாக இருக்கும் வருகிற ஞாயிற்றுக் கிழமை நாம் எல்லோரும் ஆற்றங்கரைத் தோப்புக்கு பிக்னிக் போவோம். அங்கே போய், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் தயாரித்து சாப்பிடுவோம். வடை செய்வதற்கு வேண்டிய சாமான்கள் சேகரிக்க முடிந்தால், வடையும் செய்வோம் என்று கூறினான். நல்ல ஐடியா வனபோஜனம் உல்லாசமான பொழுது போக்காக அமையும் என்று இதர நண்பர்கள் அங்கீகரித்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிலிருந்து, தேவையான சாமான் நிலைபெற்ற நினைவுகள் ே