பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் எதுஎதைக் கொண்டு வரமுடியுமோ அதை கொண்டு வரவேண்டும். சர்க்கரை வீட்டில் கிடைக்காது. காசு கொடுத்துக் கடையில் வாங்குவோம். ஒவ்வொருவரும் முடிந்தவரை காசும் தரவேண்டும் என்றும் நண்பர்கள் பேசி முடிவெடுத்தார்கள். அப்படியே செய்தும் தீர்த்தார்கள், ஞாயிற்றுக் கிழமை காலை யிலேயே எல்லோரும் உரிய சாமான்கள், பாத்திரங்களுடன் கிளம்பி னார்கள். என் அண்ணன்கள் இருவரோடு என்னையும் கூட்டிக் கொண்டார்கள். வண்ணார்பேட்டை பேராய்ச்சி கோயில் படித்துறைக்குப் போய் அனைவரும் ஆற்றில் நீராடிக் களித்தோம் பிறகு அருகில் உள்ள மாந்தோப்பில் முகாமிட்டோம் அங்கே கிடந்த கற்கள் அடுப்புக்கு பயன்படுத்தப்பட்டன. விறகுக்கு மரங்களிலிருந்து, குச்சிகளும் காய்ந்த கிளைகளும் தோப்பில் பரவிக்கிடந்த சுள்ளிகளும் உலர்ந்த சருகுகளும் சேகரிக்கப்பட்டன. குற்றாலமும் மற்றும் இரண்டு பேர்களும் சமையல் வேலையிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள். முதலில் காப்பி தயாரிக்கப் பட்டது. எல்லோரும் பருகி மகிழ்ந்தனர். அனைவரும் ஒத்துழைக்க, பொங்கல், சர்க்கரைப் பொங்கல் தயாராயின. பஜ்ஜி செய்வது தான் சுலபம் என்று தீர்மானித்து, உரிய முறைப்படி வாழைக்காய் பஜ்ஜியும் வெங்காய பஜ்ஜியும் செய்து முடித்தார்கள். உரிய நேரத்தில், இலைகள் போட்டு, எல்லோருக்கும் எல்லாம் பரிமாறப்பட்டன. சந்தோஷமாகப் பேசியும், தயாரிப்புகளைப் பாராட்டியும், தங்களைத் தாங்களே மெச்சிப்புகழ்ந்தும் சாப்பிட்டு மகிழ்ந்தனர். அங்கேயே படுத்தும், சீட்டாடியும் பொழுது போக்கினர். மாலையில் உல்லாசமாக விடுதிரும்பினர். இந்த வனபோஜன நிகழ்ச்சி பல நாள்கள் நினைவு கூர்ந்து பேசிப்பொழுது போக்குவதற்கு ஏற்ற வீரசாகச விளையாட்டாக அமைந்துவிட்டது. குற்றாலம் பிள்ளையும் நண்பர்களும், பள்ளிப் பாடநூல்களைப் படிப்பதைவிட சுவாரசியமான நாவல்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருந்தார்கள். இம் மாணவர்களில் ஒருவருக்கு உறவினரான ஒரு அன்பர் பாளையங்கோட்டை முனிசிபல் ஆபீசில் 116 3 வல்லிக்கண்ணன்