பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தன. பகவத் சிங், ராஜகுரு சுகதேவ் ஆகிய மூன்று இளைஞர்களும் ராஜத்து ரோகக் குற்றம் சாட்டப்பெற்று, சிறையில் அடைக்கப் பட்டார்கள். விசாரணை என்று பெயருக்கு நடத்தி அரசு அவர்களைத் தூக்கிலிட்டுக் கொன்றது. இச்செயல் இந்தியா முழுவதும் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது. பகவத் சிங் முதலானோர் பற்றிய பாடல்களும், வரலாற்றுப் பிரசுரங்களும் வெளிவந்தன. பகவத் சிங்கின் படங்கள், அவர் படம் பொறித்த பேட்ஜுகள் விற்பனைக்கு வந்து விரைவில் விலை போயின. அந்த பேட்ஜுகளை மாணவர்கள் வாங்கி தங்கள் சட்டை களில் குத்திக்கொண்டு பெருமையாகத் திரிந்தார்கள். சட்டைகளுக்கு பகவத்சிங் காலர் என்று, அந்த வீரர் அணிந்திருந்த சட்டையில் உள்ள காலர் மாதிரியான கழுத்து அமைப்பு தைப்பதில் தையல்காரர்கள் ஆர்வம் காட்டினார்கள். - . . . தேசத்துக்காகப் போராடிய தியாகிகள், வீரர்கள், தலைவர்களின் வரலாறுகள், விறுவிறுப்பான தமிழ்நடையில் எழுதப்பட்டு, சிறுசிறு வெளியீடுகளாக வந்து எங்கும் பரவின. அவை ஒரு அணா, இரண்டனா விலையில் விற்கப்பட்டதால் மாணவர்கள் வாங்கிப் படிப்பதற்கு வசதியாக இருந்தது. ஒரு ரூபாய்க்கு பதினாறு அனா ஒரு அணாவுக்கு நான்கு காலணா. பன்னிரண்டு பைசா (தம்பிடி). மூன்று பைசா கொண்டது ஒரு காலனா. நான்கு பைசாக்கள் ஒரு துட்டு. ஆறு பைசாக்கள் கொண்ட அரையனா ஒன்றரைத் துட்டு என்று வழங்கப்பட்டது. ஒரு அனா, வளைவுகள் அடங்கிய விளிம்பு கொண்டவட்ட நாணயம், சதுர வடிவமான இரண்டனா, சிறு வட்டவடிவ வெள்ளிக்காக அரைக்கால் ரூபாய், அதனினும் பெரிய வட்ட வெள்ளி'கால் ரூபாய், வெள்ளியினால் ஆன அரை ரூபாய், ஒரு ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. ஒரு பைசா, காலணா, பெரிய வட்ட ஒன்றரைத் துட்டு (அரையனா) ஆகியவை செப்புக் காசுகள், சதுர இரண்டனா நிக்கல் நாணயம் ஒரு ரூபாய் தாள் எல்லாம் அப்போது கிடையாது. தாளில் ஐந்துருபாய் நோட்டு, பத்து ரூபாய் நோட்டு பெரிதாக இருந்தன. ரூபாய் நாணயத்தில் வெள்ளி அதிக எடையில் கலக்கப்பட்டிருந்தது. காலணா, அரையனாப் பத்திரிகைகள் தோன்றி, தேச பக்தியை மிகுதியாகப் பரப்பிவந்த காலம் அது சங்கு சுப்பிரமணியன் ஆசிரியராக நிலைபெற்ற நினைவுகள் :ே 123