பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கள் கிராமபோன் கடையருகே சற்று நின்று பாடல்களை ரசிப்பது வழககம. தேசபக்திப் பாடல்களைப் பற்றிச் சொல்கிறபோது, சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்த ஒரு நிகழ்ச்சி நினைவில் எழுகிறது. விடுதலைப் போராட்ட இயக்கக் கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும் ஒருவர் அருமையாகப் பாடிக்கொண்டு வருவார். திருநெல்வேலி காங்கிரஸ் தொண்டர் சுப்பிரமணியம் நல்ல பாடகர். அவரே பாடல்களை இட்டுக் கட்டியும் பாடுவார். எப்பவும் கதர் வேட்டி, கதர் ஜிப்பா, காந்திக் குல்லாவுடனேயே காட்சி தரும் ஒல்லியான உருவம் கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்திருப்பார். கையில் சதா சிங்கி (ஜால்ரா) வைத்திருப்பார். சிங்கியை இசைக்குத்தக்கபடி தட்டியவாறு எடுப்பான குரலில் பாடுவார். அவர் தேசவிரோதமான பாடல்களை எடுப்பான குரலில் பாடுவார். அந்த வட்டாரத்தில் அவருக்கு நல்ல கவனிப்பும் பெயரும் கிடைத் திருந்தது. அதனால் பால்குடம் எடுத்தல் போன்ற பக்தி நிகழ்வுகளுக்கும் சம்பந்தப்பட்டவர்கள் அவரை பாடும்படி ஏற்பாடு செய்து கவுரவிப் பார்கள். தேசவிரோதமான, பிரிட்டிஷ் ஆட்சியினருக்கு எதிரான பாடல் களை அவர் பாடினார் என்று குற்றம் சாட்டப்பெற்று தொண்டர் சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார். உரிய நாளில் அவர் கொக்கிரகுளம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். மாஜிஸ்ட்ரேட் நீ குற்றம் செய்தாயா? என்று கேட்டார். நான் தேசபக்திப் பாடல்கள் தான் பாடினேன் எனப் பதிலளித்தார் தொண்டர். தேசவிரோதமான, ஆள்வோருக்கு எதிரான பாடல்களை இனி பாடமாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்தால், உனக்கு விடுதலை அளிப்பேன் என்றார் மாஜிஸ்ட்ரேட் தொண்டர் சுப்பிரமணியம் தன் தலை மீதிருந்த காந்திக் குல்லாவை நீக்கினார். அதனுள் அவருடைய சிங்கி இருந்தது. அதைக் கையில் எடுத்து, கணிர் என ஒலி எழுப்பியபடி, ஆகா என்றோடுது பார் அந்நியப் பேய்களெல்லாம் - இந்திய நாட்டை விட்டே ஒடுது பார்: என்று கம்பீரமாகப் பாடலானார். ஆத்திரமடைந்த மாஜிஸ்ட்ரேட் சைலன்ஸ் என்று கத்தினார். போலீசார் பாய்ந்து தொண்டரின் கைத்தாளத்தை (சிங்கியை) நிலைபெற்ற நினைவுகள் 3; 125