பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் வெள்ளம் வந்து நம்மை அடித்துக்கொண்டு போய்விடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். கரைகளில் நின்று வேடிக்கை பார்த்தவர்களும் அப்படித்தான் நினைத்தார்கள். இவர்களை அப்படிச் சாகவிடக்கூடாது. எப்படியும் இவர்களைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்று உறுதியாகச் சொன்னார் டவுண் காங்கிரஸ் கமிட்டித் தலைவரான சாவடி கூத்தநயினார். அவர் செயல்துடிப்பும் ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த இளைஞர். எப்படி பரதேசிகளை காப்பாற்றுவது என்று அவரும் அவருடன் நின்ற தொண்டர்களும் யோசித்தார்கள். வலுவான கயிற்றை எடுத்துப் போய் மண்டபத்தில் பலமாகக் கட்ட வேண்டும் இன்னொரு முனையை இந்தக் கரைமீதுள்ள பனை மரத்தில் கட்டவேணும் சகடை பொருத்திய தொட்டில் அல்லது சிறு ஊஞ்சலை கயிற்றில் ஒடும்படி கோர்க்கணும். மண்டபத்தின் மேலே நிற்கிற ஆள்களை ஒவ்வொருவராக அதில் உட்காரவைத்து, ஊஞ்சலை கரையில் நிற்பவர்கள் இழுத்து கரைசேர்க்க வேண்டும். இப்படி ஒரு யோசனையை சொன்னார் தொண்டர் பக்கிள் பிள்ளை. அவர் கார்காத்தார் ஆனதால், மற்றவர்கள் பக்கிள் ஆயான் என்று அவரை அன்புடன் குறிப்பிடுவார்கள். நல்ல யோசனை தான். ஆனால் நடைமுறைப்படுத்துவது கஷ்டம் என்றார் சாவடி கூத்தநயினார். முதலில் யார் இந்த வெள்ளத்தில் நீந்திப் போய் மண்டபத்தில் கயிற்றைக் கட்டமுடியும்? அது சாத்தியப்படும் என்று தோணலை என்றும் சொன்னார். நான் போய் கட்டுகிறேன் என்று உறுதியான குரலில் அறிவித்தார் பக்கிள் பிள்ளை. முடியுமா? உம்மாலே முடியுமா? என்று வியப்புடன் கேட்டார் தலைவர். ஓ! கயிறு மற்ற தளவாடங்கள் எல்லாம் சேகரியுங்கள். நான் மண்டபத்துக்குப் போவேன். அவர்களை காப்பாற்றுவேன் என்று நம்பிக்கை ஊட்டினார் பக்கிள். உடனடியாக ஆள்கள் விரைந்தார்கள். வலுவான நீளமான வடக்கயிறுகள், சகடை தொட்டில் முதலிய அத்தியாவசியப் பொருள்களை விரைவிலேயே கொண்டு சேர்த்தார்கள். 128 ஐ வல்லிக்கண்ணன்