பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்கிள் பிள்ளை கயிற்றின் ஒரு நுனியை இடுப்பில் கட்டிக் கொண்டார். நான் போய்ச் சேர்ந்து கையை ஆட்டுவேன். நீங்கள் கயிற்றின் மறுமுனையை பனைமரத்தில் இறுக்கி பலமாகக் கட்ட வேண்டும். சகடையில் தொட்டிலை மாட்டி, அதை இழுப்பதற்கு ஏற்றபடியாக இன்னொரு பொச்சக் கயிறை அதில் கட்டிவிட்டு, சகடையை கயிற்றில் ஒடவிட்டு என்பக்கம் அனுப்ப வேண்டும் என்று சொன்னார். எல்லோரையும் பார்த்துக் கும்பிட்டார். வேய் நீரு இந்த வெள்ளத்திலே நீச்சலடித்து மண்டபத்துக்கு போயிருவேரா வே? என்று தலைவர் கேட்டார். இதெல்லாம் எனக்குப் பழக்கம் தான். நான் ராஜவல்லிபுரத்தில் இருந்தபோது, செப்பறை ஆற்று வெள்ளத்திலே எத்தனை தடவை நீந்திப் போய் நீந்தி வந்திருக்கிறேன்! பெரியபெரிய வெள்ளத்தின் போதெல்லாம், பந்தயம் கட்டிக்கொண்டு, நான் ஆற்றில் குதித்து நீந்தி ஆற்று நடுவில் உள்ள மண்டபத்தைத் தொட்டுவிட்டு திரும்பவும் வந்திருக்கிறேனே என்றார். வந்தே மாதரம் என்று சொல்லி விட்டு, கரையோரமாகவே முன்னே மேற்கு நோக்கி சிறிது தொலைவு நடந்தார். வசதியான இடம் என்று அவருக்குப் பட்டதும் பக்கின் பிள்ளை வெள்ளத்தில் குதித்தார். நீரோட்டத்துக்கு ஏற்றபடி நீந்தி விரைவில் தைப்பூச மண்டபத்தின் உச்சியை அடைந்தார். கரை மீது நின்ற அனைவரும் பலமாகக் கைகொட்டி பக்கிள் ஆயானுக்கு ஜே என்று மண்டபத்தின் மேலே நின்றவர்கள் அவரைக் கும்பிட்டு வணங்கினார்கள். அவர் வசம் பார்த்து, வடக்கயிற்றை தகுந்த முறையில் இறுக்கிக் கட்டினார். சைகை செய்தார். கரைமீது நின்றவர்கள் சகடையோடு தொட்டிலை முறைப்படி அனுப்பிவைத்தார்கள். பக்கிள் ஆயான் மண்டபத்தில் நின்றவர்களில் ஒருவரை தொட்டிலில் அமரவைத்து, தள்ளி விட்டார். கரை நோக்கி அது மெதுமெதுவாக இழுக்கப்பட்டது. முதலாவது ஆள் கரை சேர்ந்ததும் பலத்த ஆரவாரமும் கைதட்டலும் அமர்க்களப்பட்டன. இந்த விதமாக அனைத்துப் பரதேசிகளும் கரைசேர்க்கப் நிலைபெற்ற நினைவுகள் $ 129