பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டார்கள். தாங்கள் தப்பிப்பிழைப்பது சிரமம் என்று அஞ்சிக் கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு மறுபிறப்பு கிடைத்தது போல் சந்தோஷம் கொண்டார்கள். பெரிய சாதனையை எளிதில் செய்து முடித்த பக்கிள் ஆயான் மீண்டும் வெள்ளப்பெருக்கை எதிர்த்து நீந்தி எப்படிக் கரைவந்து சேர்கிறார் என்று பார்க்க ஆவலுடன் நின்றார்கள் ஜனங்கள். பக்கிள் பிள்ளை ஆற்றில் குதித்தார். இப்போது கிழக்கு திசையில் நீரோட்டத்துடன் லாகவமாக நீந்தி, சிந்துபூந்துறைப் பக்கமாகச் சேர்ந்து அவர் கரையேறினார். அவருக்குப் பெரும் வரவேற்பும் பாராட்டும் கிட்டின. அக் காலகட்டத்தில் திருநெல்வேலி மக்கள் மற்றொரு சாதனை யையும் செய்துமுடித்தார்கள். பெருமைப் பட்டார்கள். திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோயிலில் திருவிழாவின் போது தேரோட்டம் நடைபெறும் சுவாமி தேர் மிகப் பெரியது. அம்மன் தேரும் பெரிதுதான். ஆனால் சுவாமி தேரைவிடக் கொஞ்சம் சிறியது. தேரோட்டம் கோலாகலமாக நாள் கணக்கில் நடைபெறும் ஒரே நாளில் தேர்கள் இழுக்கப்பட்டு நிலைக்கு வந்ததாக அதுவரை வரலாறு இல்லை. தேர்கள் இரண்டும் எட்டு நாள். பத்து நாள் என்று தெருவில் நிற்கும். நாள் தோறும் சிறிது துரமே இழுக்கப்பட்டிருக்கும். இதனால் எவ்வளவோ இடைஞ்சல்கள் என்று எண்ணுவோர் இருந்தார்கள். ஆனாலும் தேர்களை இழுத்து ஒன்றிருநாள்களிலேயே நிலைக்குக் கொண்டு வந்து சேர்க்க முடிந்ததில்லை. அந்த வருடம் காங்கிரஸ் தலைவர் கூத்தநயினார் முடிவு செய்தார், தேர்களை ஒரே நாளில் இழுத்து நிலை சேர்க்கவேண்டும் என்று. எல்லோரிடமும் தனது எண்ணத்தை தெரிவித்தார். தேரில் கதர்க்கொடி கட்டி, காந்திபடத்தையும் வைத்தால் தேர்களை ஒரே நாளில் இழுத்து நிலைக்குக் கொண்டு வருவோம் என்று பலரும் அறிவித்தார்கள். கூத்தநயினார் கோயில் நிர்வாகிகளைக் கண்டு பேசி ஆவன செய்தார். சுவாமி தேரிலும் அம்மன் தேரிலும் கதர்க்கொடிகள் கட்டப் பெற்றன. காந்தி படமும் வைக்கப்பட்டது. 130 38 வல்லிக்கண்ணன்