பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் உற்சாகம் அடைந்தார்கள். வந்தே மாதரம், மகாத்மா காந்திக்கு ஜே என்று முழக்கமிட்டபடி முதலில் சுவாமி தேரை இழுக்கலானார்கள். வேகம் காட்டி தேரை ஒரு ரதவீதியைக் கடக்கச் செய்தார்கள். அடுத்து அம்மன் தேரை இழுத்தார்கள். இப்படி மாறி மாறி இழுத்து, இரண்டு தேர்களையும் ஒரே நாளில் நிலைக்குக் கொண்டு சேர்த்தார்கள். இப்படியாக திருநெல்வேலித் தேர்கள் ஒரே நாளில் இழுக்கப்பட்டு நிலைவந்து சேர்ந்தது இது தான் முதல் தடவை என்ற வரலாற்றுச் சிறப்பு அந்த வருடம் ஏற்பட்டது. அதன் பின்னர் அநேக ஆண்டு களுக்குப் பிறகு தான் தேரோட்டத்தில் இத்தகைய சாதனை நிகழ்த்தப்பட்டது. - திருநெல்வேலிக்கு நாடகக் கம்பெனிகள் அவ்வப்போது வருவது உண்டு சர்க்கஸ் கம்பெனி வந்தால் பாளையங்கோட்டையில் முகாமிடும் பாளையங்கோட்டையில் கர்சன் கிரவுண்ட் என்ற பெரிய மைதானம் இருந்தது. அந்தப் பரந்த திறந்த வெளியில் டென்ட் அமைத்து (கூடாரம் போட்டு) சர்க்கஸ்காரர்கள் தங்கி வித்தைகள் காட்டுவார்கள். சர்க்கஸ் என்றால் மிருகங்கள் அதிகம் இருக்கும். அவை பலவிதமான வித்தைகளும் செய்து காட்டும். அப்பா உயிரோடிருந்த போது, 1929இல் டேவாள் சர்க்ஸ் என்ற கம்பெனி பாளையங்கோட்டையில் முகாமிட்டது. ஒருநாள் அப்பா எங்களை சர்க்கஸ் பார்க்க அழைத்துச் சென்றார். ஆண்கள் பெண் களின் சாகசச் செயல்கள், யானைகள், குதிரைகள், சிங்கம் புலிகள் முதலிய மிருகங்களின் விளையாட்டுகள் பிரமிப்பு தந்தன. உயரத்தில் கட்டப்பட்டிருந்த டிரப்பிசியம் பார்களில் பெண்கள் ஆடிக் காட்டிய விளையாட்டுகள் திகிலூட்டுவனவாகத் தோன்றின. பபூன்களின் கோமாளித்தனக் கூத்துகளும் இருந்தன. பின்னர் ஐந்து வருடங்களுக்குப் பிறகு ஒயிட்வே சர்க்கஸ் என்ற குழு வந்து தங்கி வித்தைகள் காட்டின. இந்தக் கம்பெனியில் மிருகங்கள் அதன் பிறகு மிருகங்களே இல்லாத பாம்பே ஷோ என்ற சர்க்கஸ் வந்தது. இதில் ஆண்கள் பெண்களின் விளையாட்டுகளோடு பார்க்க வருகிறவர்களிடமிருந்து பணம் பறிக்கும் சூதாட்ட விளையாடல்கள் அதிகம் இடம்பெற்றிருந்தன. நிலைபெற்ற நினைவுகள் 3; 131