பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை பூர் தேவிபால வினோத சங்கீத நாடக சபை, மதுரை முத்தமிழ் கலாவித்வரத்ன பூரீ ரஞ்சனி நாடக சபை - இப்படி இருந்தன நாடகக் குழுக்களின் பெயர்கள். அந் நாள்களில் பூரீ கன்னையா நாடகக் கம்பெனி மிகுந்த புகழ் பெற்றிருந்தது. கன்னையாவின் நாடகங்கள் புராணக்கதைகளை ஒட்டிய பெரிய பெரிய நாடகங்களாக இருக்கும். கண்ணையும் கருத்தையும் கவரும் காட்சி அமைப்புகள்; சட்சட்டென மாறி பிரமிக்க வைக்கும் "டர்னிங் சீன்கள், மின் விளக்கு ஜோடனைகள் என்று தடயுடல் படுத்துவார்கள், நாடக மேடையில் சினிமா வந்திரதாத காலம் அதனால் இத்தகைய ஜாலங்கள் மக்களைப் பெரிதும் ஈர்த்தன. கன்னையா ஒரு புது நாடகம் தயாரித்ததும், அதை சென்னையில் பல மாதங்கள் நடித்துக் காட்டுவார். அங்கிருந்து புறப்பட்டு, ஒவ்வொரு பெரிய நகரத்திலும் முகாமிட்டு நாடகங்கள் நடத்துவார். கடைசியாக திருநெல்வேலிக்கு வருவார். ஒவ்வொரு நகரத்திலும் கன்னையா கம்பெனி மாதக் கணக்கில் முகாமிட்டு நாடகங்கள் நடத்தும் ஒரே நாடகத்தை வாரக் கணக்கில் மேடையேற்றுவார். ஜனங்கள் அலுக்காமல் பார்த்து மகிழ்ந்தார்கள். மின்சார வசதி இல்லாத ஊர்தியேட்டர்களில், அவரே தனி ஜெனரேட்டர் வைத்து மின்வசதி செய்துகொள்வார். பிரமாண்டமான, அற்புதமான, காட்சி ஜோடனைகள், விரைவில் சீன்கள் மாறுவது போன்றவற்றினால் கன்னையா கம்பெனி நாடகங்கள் புகழ் பெற்றிருந்தன. தசாவதாரம் நாடகத்தில் வைகுண்டத்தில் மகாவிஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் காட்சி காட்டப்படும். முதலில் சொர்க்கத்தின் கதவுகள் காட்டப்படும். கோயில் கதவுகள் போன்று பெரியன. அதன் ஒவ்வொரு சதுரத்திலும், விளிம்புகளிலும் பிரகாசமான விளக்குகள் ஒளிரும் சட்டென ஒரு வெடிச் சத்தம் கேட்கும். கதவுகள் தாமே திறக்கும் அப்படித் திறக்கும்போது கதவுகளில் பொருத்தப்பட்டுள்ள மணிகள் கணகண ஒலி எழுப்பும் திறந்த கதவுகளுக்கு அப்பால், ஒளி நிறைந்த சூழலில், பாம்பணையில், பட்டுபீதாம்பர தாரியாக, டாலடிக்கும் நகைகள் அணிந்த மகாவிஷ்ணு ஒய்யாரமாகப் பள்ளி கொண்டிருப்பார். இந்தக் காட்சி யாரைத் தான் வசீகரிக்காது? கன்னையா பகவத் கீதையை நாடகமாக்கி, மேடையேற்றினார். உண்மையான குதிரைகள் பூட்டிய சிறு ரதத்தையே மேடையில் நிலைபெற்ற நினைவுகள் 3; 133