பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு வந்து நிறுத்தினார். அவர் ரதத்தில் அமர்ந்து கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசிப்பது தத்ரூபமாகக் காட்டப்படும். கன்னையா கம்பெனி பெற்ற பெரும் வெற்றிகளைக் கண்ட இதர நாடகக் குழுவினரும் தங்கள் நாடகங்களிலும் பிரமாதமான காட்சி ஜோடனைகள், மாயா ஜாலங்கள் எல்லாம் செய்து காட்ட முற்பட்டனர். முக்கியமாக நவாப் டி.எஸ். ராஜமாணிக்கத்தின் பூர் தேவிடால விநோத சங்கீத நாடக சபை இவ் உத்திகளைப் பெரும் அளவில் கையாண்டது. x நாடகக் கம்பெனிகளின் நாடகங்களால் வசீகரிக்கப்பட்ட பல தனிநபர்கள் தாங்களும் நாடகம் போட வேண்டும் என்று ஆசைப்பட்டு குழுசேர்ந்து விசேஷ சந்தர்ப்பங்களில் நாடகம் நடித்து மகிழ்வார்கள். ஊர்தோறும் இப்படி நடந்தது. பாளையங்கோட்டையிலும் இத்தகையவர்கள் இருந்தார்கள். கடைவைத்திருந்தவர்கள், வெவ்வேறு தொழில் துறையில் ஈடுபட்டவர்கள், இவ்விதம் ஆசை காரணமாக, ஒன்று சேர்ந்து, பல நாள்கள் பயிற்சி பெற்று, கோயில் திருவிழாவின் போது, அல்லது சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாள்களில் நாடகம் நடத்திக் காட்டி மகிழ்ச்சி அடைந்தார்கள். பாளையங்கோட்டையில் சங்கரன் பிள்ளை என்ற சிறு கடை வியாபாரி, பிச்சையா தாஸ் என்கிற தொழிலாளி ஒருவர், மற்றும் நண்பர்கள் சேர்ந்து பயின்று மார்க்கண்டேயா, ஞான செளந்தரி, சத்தியவான் சாவித்திரி போன்ற நாடகங்களை திறந்தவெளி அரங்கில் உற்சாகமாக நடித்துக் காட்டினார்கள். ஒவ்வொரு நடிகரும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி சுயமாகவே வசனம் படைத்து ஒப்புவிப்பதும் நடக்கும் மார்க்கண்டேயர் நாடகத்தில் ஒருவர் முன்குறத்தி பின்னமன் என்று இரு வேடங்களில் நடித்தார். இத்தகைய நாடகங்களில் ஆண்களே பெண்வேடம் தரித்து நடிப்பார்கள். முக்கிய நடிகர் ராஜபார்ட் எனவும், பெண் வேடத்தர் ஸ்த்ரீ பார்ட் என்றும் குறிப்பிடப்படுவர். முன்பகுதியில் குறத்திவேடம் பூண்டு குறிசொல்லி அட்டகாசம் செய்த நடிகர், தொடர்ந்து பிறகு நான் ஆர்ப்பாட்ட எமனாக வருவேன்; படாடோப எமனின் பிரமாத நடிப்பை காணத் தவறாதீர்கள் நடுவில் எழுந்து போய் விடாமல் கடைசிவரை இருந்து பார்த்துச் செல்லுங்கள் 134 : வல்லிக்கண்ணன்