பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிப்பதும் டான்ஸ் ஆடிக் களிப்பதுமாக ஜாலியாக இருப்பார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. அதே போல, ஒய்வு பெற்ற இந்திய முதியவர்கள் பொழுது போக்குவதற்காக இண்டியன் க்ளப் அமைக்கப்பட்டிருந்தது. இது ஒரு சிறு கட்டிடத்தில் இருந்தது. இச் சங்கம் எப்போதுமே ஆரவாரமற்று, அமைதியாகத் துரங்கி வழியும் தோற்றம் கொண்டிருந்தது. சாய்வு நாற்காலிகளில் பெரியவர்கள் சுகமாகச் சாய்ந்து கண்மூடிக் கிடப்பார்கள். சிலர் அமைதியாக சீட்டாடிக் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது வம்பளந்து பேசி மகிழ்வார்கள். இண்டியன் க்ளப் மெம்பர்களின் நடவடிக்கைகள் இப்படி எல்லைக்குட்பட்டதாகவே இருந்தன. - ஊர்ப்புறமிருந்து சிலர் நடந்து உலாவருவார்கள். தினசரி நடப்போரும் உண்டு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாடுகளில் வந்து போவோரும் உண்டு. பங்களாக்களில் வசிக்கும் பெரிய மனிதர்கள் வெளியே தலைகாட்டுவதில்லை. ஆகவே, ஹைகிரவுண்ட் மிக அமைதியான மேட்டுநிலமாக, கத்தமும் காற்றோட்டமும் கொண்ட வெம்பரப்பாகவே விரிந்து கிடந்தது. அது ஒரு காலம் காலஓட்டத்தில் அந்தப் பிரதேசம் எல்லாம் அரக்கத் தனமான மாறுதல்களைப் பெற்றுவிட்டது. பெரிய பெரிய கட்டிடங்கள் மண்டிய நாகரிகக் காங்க்ரீட் காடு ஆகப் பரிணாமம் பெற்றுள்ளது. மிகப் பெரிய ஆஸ்பத்திரி, மெடிக்கல் காலேஜ், மற்றும் ஜனங்கள் குடியிருக்கும் பகுதிகளாகப் பலபல நகர்கள் புரம்கள் என்று வளர்ந்து, பரபரப்பும் நெருக்கடியும் மிகுந்த இடம் ஆகிவிட்டது. தற்காலத்தில் அந்தப் பகுதியைக் காண நேரிடுகிறவர்கள், இதற்கு ஏன் ஹைகிரவுண்ட் என்ற பெயரோ எனத் திகைக்கவே செய்வர். அந்த இடம் முன்னொரு காலத்தில் இருந்த நிலையை இன்றுள்ள எவரும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. அந்தப் பரந்து விரிந்து கிடந்த மேட்டு நிலத்தில், சில சதுர அளவு நிலப்பரப்பு பண்படுத்தப்பட்டு, விளையாட்டு மைதானமாக ஆக்கப் பட்டிருந்தது. போலீஸ் ஸ்போர்ட்ஸ், விசேஷமாக ஏற்பாடு செய்யப்படும் ஹாக்கி போட்டி விளையாட்டுகள் அந்த மைதானத்தில் நடைபெற்றன. அந்நாள்களில் கிரிக்கெட் ஆட்டம் தற்காலம் போல மிகுந்த கவனிப்புக்குரியதாக இருந்ததில்லை. பாளையங்கோட்டை ஹாக்கி 136 38 வல்லிக்கண்ணன்