பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரமப்படுத்தியது என்றும் அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த வேண்டியிருந்தது என்றும் அம்மா சொல்வாள். அந்த அறுவையில் என் உடம்பிலிருந்து பெரும் அளவில் ரத்தம் வெளிப்பட்டது என்றும், ஏற்கனவே மெலிவாக இருந்த நான் மேலும் ஒல்லியானதாகவும் அதன் பிறகு உடம்பு தேறவேயில்லை என்றும் அம்மா சொன்னது உண்டு. பிறக்கும் பொழுதே எனக்கு இரண்டு பற்கள் இருந்தன. மேல் வரிசைப் பற்கள். அவை உறுதியாக இருந்தன. எனது எட்டாவது வயசில், திருநெல்வேலியில் வசித்தபோது, ஒரு நாள் மாலை சந்திப்பிள்ளையார் கோயிலில் போடப்பெற்ற வெடலைத் தேங்காயின் பெரிய சில்லை கைப்பற்றி, தேங்காயை சிரட்டையிலிருந்து அகற்றுவதற்காகக் கடித்த போது, என் கூடவே பிறந்த பற்கள் இரண்டும் தாக்குப் பிடிக்க முடியாமல் உதிர்ந்து விட்டன. அதற்கு முன் இடைக்கிடையே வேறு பல் விழுந்து முளைத்த போதிலும், இம் முன் பற்கள் இரண்டும் உறுதியாக வளர்ந்தன. வெடலைத் தேங்காய் கடித்தது அவற்றுக்கு விபத்தாக முடிந்தது. பின்னர் உரிய காலத்தில் வேறு பற்கள் முளைத்துவிட்டன. என் குழந்தைப் பிராயத்தின் சுவாரசியமான சமாச்சாரத்தில் மற்றும் ஒன்று என் நெற்றி நடுவில் இரண்டு நரம்புகள் நாமம் போல் அமைந்து காணப்பட்டன. அப்படி நாமமாக நரம்புகள் பளிச்சிடுவது பிள்ளைக்கு ஆகாது நல்லதல்ல- என்று பெரியவர்கள் கருதினார்கள். அந்த நாமம் மறையவேண்டும் என்று சாமிகளுக்கு நேர்ந்து கொண்டாள் என் அம்மா. ஒரு முறை கோயில் யானையிடம் காட்டினார்கள். அது தனது தும்பிக்கையில் நீர் எடுத்து, வேகமாகக் குழந்தையின் முகத்தில் பீச்சியது. பிள்ளை பதறிப் பயந்து அழுதது தான் கண்ட பலன் நரம்பு நாமம் மறையவில்லை. பலப்பல வருடங்களுக்குப் பிறகு தானாகவே அது துரத்துக்குடியிலிருந்து அப்பா ஒட்டப்பிடாரம் ஊருக்கு மாற்றப் பட்டார். ஒட்டப்பிடாரம் ஒரு கிராமம். அந்த ஊர் கப்பல் ஒட்டிய தமிழன் என்று சிறப்புப் பெற்ற தேசபக்தர் தியாகி வ.உ. சிதம்பரனாரால் பெயர்பெற்றது. . அதற்கும் முன்னதாகவே ஒட்டப்பிடாரம் வரலாற்றுப் பெயர் பெற்ற ஊர் தான். பாளையக்காரன் கட்டபொம்ம நாயக்கன் கோட்டை கட்டி வாழ்ந்த பாஞ்சாலக்குறிச்சி அருகில் தான் உள்ளது. 14 % வல்லிக்கண்ணன்