பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகாரி நெகிழ்ச்சி அடைந்தார். ஆண்டவன் உம்மையும் உமது குழந்தைகளையும் ஆசிர்வதிப்பாராக என்று ஆங்கிலத்தில் வாழ்த்தினார். மனநிறைவுடன் அங்கிருந்து வெளியேறினார். சாந்தப்ப பிள்ளையின் நேர்மையையும் நாணயத்தையும் கண்டிப்பையும், நிர்வாகத் திறனையும் மெச்சி ரிப்போர்ட் எழுதினார் அதிகாரி விரைவிலேயே பிள்ளைக்கு உத்தியோக உயர்வு கிடைத்தது. வேறு ஜில்லாவுக்கு மாறுதலும் பெற்றார் அவர். இப்படி நேர்மைக்குணமும் நியாய உணர்வும் பெற்ற அதிகாரிகள் அபூர்வ மனிதர்கள் தான். வெள்ளைக்கார அதிகாரிகள் அள்ளிச் சுருட்டிக் கொண்டு போவதில் ஆர்வம் உடையவர்களாக இருந்தார்கள் என்பதும் அவ்வப்போது வெளிப்பட்டு வந்தது. கவர்னர் துரை அல்லது வைசிராய் பிரபு ஒய்வு பெற்று இந்தியாவை விட்டுப் புறப்படுவதற்கு முன்னதாக நாடு பூராவும் சுற்றிப்பார்க்க என்று உத்தியோக ரீதியில் பவனி கிளம்புவார்கள். அவர்கள் போகிற இடங்களில் எல்லாம், அவரது ஆளுகைக்கு உட்பட்ட அலுவலர்கள் அதிகாரிகள் வகையரா, துரைக்கு அன்பளிப்பு வழங்கவேண்டும் என்று பணமும் மதிப்பு மிகு பொருள் களும் வசூல் செய்து அளிப்பதை கடமையாகக் கொண்டிருந்தார்கள். நான் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில், வைசிராயாக இருந்த இர்வின் பிரபு நகரம் நகரமாக பவனி வந்தார். பாளையங்கோட்டை வழியாக அவர் திருவனந்தபுரம் செல்ல ஏற்பாடாகியிருந்தது. பள்ளி மாணவர்கள் அனைவரையும் அணிவகுப்பாக நடத்திச் சென்று திருவனந்தபுரம் சாலையில் வரிசையாக நிற்கவைத்தார்கள் ஆசிரியர்கள். உரிய நேரத்தில் கார்களின் அணிவகுப்பு மெதுவாகச் சென்றது. இர்வின் பிரபுவும் அவரது சீமாட்டியும் புன்முறுவல் பூத்தபடி காட்சி தந்தார்கள். அவர்களுக்குப் பின்னால், அந்த ஜில்லாவில் வசூலான பரிசுப் பொருள்கள் நிறைந்த வாகனங்கள் சென்றன. திருவனந்தபுரத்தில் மன்னர் வைசிராய்க்கு ராஜமரியாதை செய்து அன்பளிப்புகள் தாராளமாகவே வழங்குவார் என்று ஆசிரியர்கள் பேசிக் கொண்டார்கள். ஆள்வோர் எப்போதும் மக்களையும் நாட்டை யும் சுரண்டிச் செல்வம் சேர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். நாங்கள் பள்ளிக்கூடம் போய் வருகிற வழியில், ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு அதிசய நிகழ்வு தலைகாட்டியது. 142 : வல்லிக்கண்ணன்