பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசுகளை அள்ளிச் செல்கிறபோது சந்தோஷமாகப் பார்த்துக் கொண் டிருக்கிறார்கள் என்றும் தெரிந்தவர்கள் விளக்கம் அளித்தார்கள். எப்படியோ அந்தப் பெண்ணின் திருவிளையாடல் பல தினங்கள் ஆனந்தகரமாக நிகழ்ந்து வந்தது. சுமார் ஒருமாத காலம் அது நடந்தது. அப்புறம் அந்தப் பெண் பாளையங்கோட்டைப் பக்கம் தலைகாட்டவே uിക്കാ திருநெல்வேலி பேட்டை வட்டாரத்திலும் அந்தப் பெண்ணின் நடமாட்டம் இல்லை. துரத்துக்குடி - மதுரை என்று எங்காவது போயிருக்கும் என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். அதன் பிறகு அவளை மறந்துவிட்டார்கள். எனது பள்ளிவாழ்க்கை சந்தோஷமாக வளர்ந்தது. ஒவ்வொரு வருடமும் நல்ல மாணவன் என்று நன்னடத்தைக்கான பரிசு எனக்கு வழங்கப்பட்டு வந்தது. தமிழ்ப்பாடத்தில் முதல் பரிசும் எனக்குக் கிடைத்தது. சில வகுப்புகளில் சில சமயம் ஆங்கிலத்துக்கான முதல் பரிசும், சில வருடம் இரண்டாம் பரிசும் எனக்கு அளிக்கப்பட்டன. எல்லாம் புத்தகங்களே. தமிழ்ப் பாடத்துக்கான பரிசுக்கு தமிழ் நூல்கள் கிடைத்தன. நன்னடத்தைக்கான பரிசு, மற்றும் ஆங்கிலத்துக்கான பரிசுக்கு ஆங்கிலக் கதை நூல்கள் தரப்பட்டன. ஆகவே படிப்பதற்குப் புதியபுதிய புத்தகங்கள் கிடைத்துக் கொண்டேயிருந்தன. அர்ச் சவேரியார் உயர்நிலைப் பள்ளி ரோமன்கத்தோலிக்கப் பள்ளி ஆகும். கல்விப் பயிற்சி, ஒழுக்கம், கட்டுப்பாடு முதலியவற்றின் கண்டிப்பான நடைமுறைக்குப் பெயர் பெற்ற பள்ளி அது தலைமை ஆசிரியர் கத்தோலிக்கப் பாதிரியார் தான். மேல்வகுப்புகளுக்கு ஆங்கிலம் சரித்திரம் போன்ற சில பாடங்களை 'சாமியார்கள் சிலர் நடத்துவர். பாதிரிமாரை சாமியார்கள் என்றே ஜனங்கள் குறிப்பிட்டு வந்தார்கள். பள்ளிக்கூடம் சாமியார் பள்ளிக் கூடம் என்று பெயர் பெற்றிருந்தது. சாமியார்கள் தவிர, கிறிஸ்தவ ஆசிரியர்கள் சிலர் இருந்தார்கள். மற்றப்படி பெரும்பாலான ஆசிரியர்கள் பிராமணர்கள் தான். ஒன்றிரண்டு பிள்ளைமார் ஆசிரியர்களும் இருந்தார்கள். பிராமண ஆசிரியர்கள் அனைவரும் தலைமுடியை நீளமாக நிலைபெற்ற நினைவுகள் 8 145