பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்திலிங்கய்யர் சாகாரா எங்கள் வயிற்றெரிச்சல் தீராதா என்று பையன்கள் கத்துவது உண்டு. அவர் இல்லாத போது தான். சங்கரய்யர் என்று ஒரு சயன்ஸ் வாத்தியார். எப்போதும் துரங்கி வழியும் தோற்றத்துடனேயே காணப்படுவார். அவரை சோம்பேறிச் சங்கரய்யர் என்று மாணவர்கள் குறிப்பிட்டார்கள். நெடுநெடு என்று உயரமாய் ஒல்லியாய் காட்சி தந்த சுப்பய்யர் நெட்டைக் கொக்கு என்று பெயர்பெற்றார். ஆங்கில ஆசிரியர் ஒருவருக்கு உயர்நிலை மாணவர்கள் ஜப்பான் லேடி என்று பெயர் வைத்திருந்தார்கள். பொருத்தம் இல்லாமலே சும்மா ஜாலியாக வைத்த பெயராகத் தான் இருக்க வேண்டும் அது. பால் பூபால் ராயர் என்று ஒரு ஆசிரியர். அவர் சந்தை நாளில் பாளையங்கோட்டைச் சந்தையில் கடைபோட்டு உப்பு வியாபாரம் செய்வார். பையன்கள் வாத்தியார் இருக்கிறாரே என்று பயந்து அந்தக் கடைப்பக்கமாகப் போகாமல் ஒதுங்கிப் போவார்கள். அதை அவர் கவனித்து விடுவார். மறுநாள் அந்தப் பையன்களை காணநேர்கிற போது, சந்தைக்கு வந்தால் என் கடையில் ஏன் உப்புவாங்குவதில்லை? வேறு கடைக்குப் போய் உப்பு வாங்குகிறாயே? வாத்தியாருக்கு காசு சேரப் படாதுன்னு நினைக்கிறாயா? என்று கோபிப்பார். சந்தையில் அவரைப் பார்த்து சலாம் போட்டு அவர் கடைக்குப் போய் உப்பு வாங்குகிற பையன்களைப் பார்த்து சந்தோஷப்படுவார். பாராட்டாக ஏதாவது சொல்லி மகிழ்விப்பார். வாத்தியார்களும் சராசரி மனிதர்கள் தான் என்பதை அவர்களது சொல்லும் செயல்களும் எடுத்துக்காட்டும். பாதிரியார்களில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பாதிரிகளும் இருந்தார்கள். அவர்கள் மேல்வகுப்புகளுக்கு ஆங்கிலம் அல்லது வரலாற்றுப் பாடம் கற்பித்தார்கள். இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த ஃபாதர் க்ளேட்டன் ஐந்தாவது பாரத்துக்கு இங்கிலீஷ் கற்றுக்கொடுத்தார். டென்மார்க்கைச் சேர்ந்த ஃபாதர் ஃப்ளெமிங் என்பவர் நான்காவது பாரத்திற்கு ஹிஸ்டரி (சரித்திரம் - வரலாறு வகுப்பு எடுத்தார். அவர் பேச்சு தெளிவாகப் புரியவில்லை என்று மாணவர்கள் குறை கூறுவர். ஐந்தாவது பாரம் படித்தவர்களில் மகாராஜன் என்றொரு மாணவன் இருந்தான். படிப்பதில், அவனுக்கு அதிகம் ஆர்வம் நிலைபெற்ற நினைவுகள் : 147