பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கள் வசித்த தெருவைச் சேர்ந்த மாணவர் குற்றாலமும் அவருடைய நண்பர்கள் சிலரும் அப்பேர்ப்பட்ட இனத்தினர் தான். அவர்கள் பத்தாவது ஆறாம் பாரம்) படித்துக் கொண்டிருந்தார்கள். 'சிக்ஸ்த் பார்ம் பையன்கள் பெரியவர்கள். லூட்டி அடிப்பதில் பேர்போனவர்கள்; ஒவ்வொரு வகுப்பு நேரத்திலும் (பீரியட் கூச்சலி ட்டுக் கலாட்டா செய்து மகிழ்வது அவர்களது பொழுது போக்காக இருந்தது. இதனால் எல்லாம், மாடியிலிருந்த அவர்கள் வகுப்பை தலைமை ஆசிரியரின் அறைக்கு எதிராக தனித்துக் கட்டப்பட்டிருந்த ஒரு அறைக்கு மாற்ற ஏற்பாடாயிற்று ஹெட்மாஸ்டர் பார்வை அங்கு சதா படும் ஆதலால் பையன்கள் அடக்க ஒடுக்கமாக இருப்பார்கள் என்ற எண்ணமே இதற்குக் காரணம் அந்த அறை காம்பவுண்டுச் சுவரை ஒட்டி தனித்திருந்தது. அதன் இருபக்கங்களிலும் வேப்பமரங்கள் நின்றன. காற்று சுகமாக அறைக்குள் வந்து குளுமைப்படுத்தியது. தமிழ்ப்பாடம் நடத்திக் கொண்டிருந்த வீரபாகு பிள்ளை, கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த குற்றாலமும் நண்பர்களும் பாடத்தை கவனிக்காமல், கண்களை மூடியவாறு சாய்ந்திருந்ததைப் பார்த்தார். அவர் கிண்டலும் கேலியுமாக நக்கலும் நையாண்டியுமாகப் பேசி மாணவர்களைப் பரிகாசம் செய்து மகிழ்கிறவர். காலையிலே வீட்டிலே பொதுவா பழையச் சோறுதான் சாப்பிடு ஹாங்க மண்பானையிலே நீத்தண்ணியிலே ஊறி ஜில்லுனு இருக்கிற பழையச் சோற்றை திருகப் பிழிஞ்சு, மலையாள மரவையிலே போட்டு, முன்னிர்ப்பள்ளம் கட்டித் தயிறை ஊத்திப் பிசைஞ்சு, தொட்டுக்கிடுற துக்கு கண்டக்கறிவும் மோர்மிளகா வத்தலும் வச்சுக்கிட்டு சாப்பிட்டா, வயிறு முட்ட ஒரு புடி புடிக்கத்தான் தோணும் அப்படி உண்டுட்டு வந்தா படிக்கவா தோணும்? சுகமா சாய்ந்து துரங்கத் தான் தோணும். வேப்பமரத்துக் காத்து வேறே குளுகுளுன்னு இருக்குதா கேட்பானேன்? குற்றாலம் அன்ட் கம்பெனி மாதிரி சுகநித்திரையை அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கணும் என்றார். பையன்கள் ரசித்துச் சிரித்தார்கள் என்ன குற்றாலம் உட்கார்ந்து துரங்குறதை விட படுத்துக்கிட்டுத் துரங்கினால் சுகமாக இருக்கும்னு நினைக்கீரா? என்று வீரபாகு பிள்ளை கிண்டலாகப் பேசினார். 'ஏய், 50 98 வல்லிக்கண்ணன்