பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீயெல்லாம் ஏன் பள்ளிக்கூடம் வாறே? தெண்டப் படிப்பு: என்று தொடர்ந்தார். அப்போது யாருமே எதிர்பாராத - எதிர்பார்க்க முடியாத - காரியத்தை செய்தான் குற்றாலம் தனது இடத்தில் எழுந்து நின்றான். தமிழ்ப் பாடப்புத்தகத்தை கையில் பற்றியவாறு வாத்தி பாரை நோக்கி வந்தான். வீரபாகுபிள்ளை பேரில் அவனுக்கு ஏற்கனவே கடுப்பு. அடிக்கடி அவனை அவர் குத்தலாகப் பேசி கிண்டல் பண்ணி வந்தார். இப்போது அது அளவுமீறிவிட்டது என்று அவன் எண்ணியிருக்க வேண்டும். அவன் மேஜை அருகில் வந்து, புத்தகத்தை ஓங்கி வாத்தியாரின் தலை மீது ஒரு அறை அறைந்தான். அடுத்து மூஞ்சியில் ஒரு அடி கொடுத்து புத்தகத்தை அவர் மீது வீசிவிட்டுவெளியேறினான். வேகமாகப் போய், காம்பவுண்டுச் சுவர் மீது தாவிஏறி மறுபக்கம் குதித்து அவன் பின்னாடியே வந்த அவனது நண்பன் ஒருவன் பாடநூலை பலம்கொண்டமட்டும் கிழித்து, கிழிந்த தாள்களை பூதுவுவது போல் வாத்தியார் தலை மீது சிதறிவிட்டு, வேகமாக வெளியே ஒடி சுவரேறிக் குதித்து, குற்றாலத்தைப் பின்பற்றினான். வகுப்பில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த வாத்தியார் சிறிது நேரத்துக்குப் பிறகு பியூன் பியூன் என்று கத்தினார். அவர் கூவுவதைக் கேட்டு ஹெட்மாஸ்டர் அறை முன் காவலிருந்த சேவகன் வருவதற்குள் குற்றாலமும் நண்பனும் போன திசைதெரியாமல் ஒடி மறைந்தனர். பிறகு தலைமை ஆசிரியர் வந்தார். விசாரித்தார். போனார். என்ன செய்ய முடியும் அவர்களால்? குற்றாலமும் சினேகிதனும் அதன் பிறகு பள்ளிக்கூடம் பக்கம் அடி எடுத்து வைக்கவேயில்லை. இப்படி முரட்டுத்தனம் பண்ணுகிற, குறும்புகள் செய்கிற மாணவர்கள் எல்லாக் காலங்களிலும், எல்லா ஊர்களிலும் இருந்தார்கள் - இருப்பார்கள்! என் அப்பா படித்த போது அவரும் நண்பர்களும் பள்ளியில் செய்த அட்டகாசங்கள் பற்றி பெருமையாக, வீர சாகசக் கதை மாதிரி, சொன்னது உண்டு. பிற்காலத்திலும், மாணவர்கள் வாத்தியார்கள் போக்குகள் பற்றி அவ்வப்போது அநேகர் சொல்லியிருக்கிறார்கள். . . நிலைபெற்ற நினைவுகள் 3; 151