பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் படித்துக் கொண்டிருந்த வருடங்களில் தான் பாளையங் கோட்டை திருநெல்வேலிக்கு வீதிகள் தோறும் மின்விளக்குகள் வந்தன. 1933இல் வேலை ஆரம்பித்து 1934இல் நிறைவுபெற்று, தெரு விளக்குகள் மின்மயம் ஆயின. துரத்துக்குடி திருநெல்வேலி எலெக்ட்ரிக் சப்ளைகம்பெனி என்றொரு தனியார் நிறுவனம் அந்தப் பணியை ஏற்றுச் செய்துமுடித்தது. நெடுக பள்ளங்கள் தோண்டியது, இரும்புக் கம்பங்கள் கொண்டு வந்து குழிகளில் நாட்டியது, வயர் இழுத்தது, மங்கிய காவி வர்ணத்திலிருந்த கம்பங்களுக்கு முதலில் ஆரஞ்சு வர்ணம் அடித்து, அது உலர்ந்ததும் அதன் மேலே சில்வர் பெயின்ட் பூசியது, கம்பங்கள் வெள்ளிமயமாய் பிரகாசித்தது, உரிய காலத்தில் விளக்குகள் எரியத் தொடங்கியது எல்லாம் அனைவருக்கும் வேடிக்கைக் காட்சிகளாய்பட்டன. தெரு விளக்குகள் மின்மயமானதைத் தொடர்ந்து, கட்டிடங்கள் கடைகள் வீடுகள் பலவற்றிலும் மெதுமெதுவாக மின்சாரம் புகுந்தது. இப்படியாக பாளையங்கோட்டை திருநெல்வேலி நகரங்கள் நாகரிக வளர்ச்சி பெற்றதை என் மாணவப் பருவத்தில் நான் கண்டறிய நடிந்தது. அடுத்து அந்த வட்டாரத்துக்கு சினிமா வந்தது. வீரராகவபுரத்துக்கும் (திருநெல்வேலி ஜங்ஷன்) டவுணுக்கும் இடையேயுள்ள சுவாமி நெல்லையப்பா ஹைரோடில், ஒரு இடத்தில், நெல்லை அரிசியாக அரைத்துக் கொடுக்கும் ரைஸ் மில் ஒன்று இருந்தது. நீளமும் அகலமும் கொண்ட பெரிய கட்டிடம் அதன் சொந்தக்காரர் மில்லை மூடிவிட்டு, கட்டிடத்தை சினிமா தியேட்டராக மாற்றினார். உரிய ஏற்பாடுகள் பலவும் செய்து, லில்லி சினிமா எனப் பெயரிட்டு, படங்கள் திரையிடலானார். நல்ல வரவேற்பும் பண வசூலும் கிட்டியது. படங்கள் ஆடுது ஒடுது சண்டைபோடுது என்னவெல்லாமோ செய்து என்று ஜனங்கள் அதிசயித்து பார்த்து மகிழக் குழுமினார்கள். பேசாப் படங்கள் தான் காட்டப்பட்டன. நகரங்களைச் சேர்ந்தவர்களும், பக்கத்து கிராமங் களிலிருந்து வந்தவர்களும் தியேட்டரை மொய்த்தார்கள். அமெரிக்கப் படங்களும் இந்திப் படங்களும் தான் ஓடின. தமிழில் படம் பிடிக்கும் முயற்சிகள் அப்போது தான் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஊரெல்லாம் சினிமாப் படம் பார்த்து ஆச்சர்யப்பட்டுக் கொண் 152 38 வல்லிக்கண்ணன்