பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிருந்த போது, எனக்கும் என் சகோதரர்களுக்கும் அந்த ஆசை ஏற்படாமல் இருக்குமா? இருந்தாலும் நீண்டநாள் வரை எங்கள் எண்ணம் நிறைவேற வில்லை. அப்பா இறந்ததற்குப் பிறகு எங்கள் குடும்பத்தில் பொருளாதார சிரமம் தலைகாட்டியது. அப்பாவுக்கு இறுதிக்கால வைத்தியச் செலவுகள் செய்தது. சாவு செலவுகள், மற்றும் முதல் ஆண்டுத் திவசம் கொடுத்த செலவு முதலிய வகைக்காகக் கடன் வாங்க வேண்டியிருந்தது. அந்தக் கடன்களை அடைப்பதற்காக, ராஜவல்லிபுரத்தில் இருந்த வயல்களில் ஒன்றை விற்க நேரிட்டது. நகரத்தில் வசித்து நான்கு பேர் படித்துக் கொண்டிருந்த செலவு இருக்கவே இருந்தது. வயலில் விளைந்து வந்த நெல்லை வைத்துத் தான் செலவுகளை சரிக்கட்டவேண்டும் சில பூவில் நெல் விளையாமல் போய்விடும். அப்படி வறட்சி ஏற்பட்ட காலத்தில், வீட்டுச் செலவுகளை சரிக்கட்ட மிகவும் சிரமப்பட நேரிடும். இதனால் எல்லாம் அம்மா கண்டிப்பாக இருந்தாள். அநாவசிய மான செலவுகளை அங்கீகரிப்பதில்லை. சினிமா பார்க்கப் போவது வீண் செலவு என்று கருதினாள். எனவே படம் பார்க்கப் போவதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிட்டவேயில்லை. எனினும், ஊர்நெடுக சினிமா பற்றிய பேச்சாக இருந்ததாலும், ஆண்களும் பெண்களும் ஆடி ஒடும் படங்கள் பற்றி அதிசயமாகப் பேசி மகிழ்ந்ததாலும், அந்த அதிசயத்தை நாங்களும் பார்க்க வேண்டியது தான் என்று அம்மா மனம் இரங்கினாள். ஒரு படம் பார்க்கப் போகலாம் என அனுமதித்தாள். அமெரிக்கப்படம் ஒன்று திரையிடப்பட்ட நாளில் நாங்கள் போய்ப் பார்த்தோம். குதிரை வீரன் என்று தமிழில் பெயர் சொல்லப்பட்டது. அதன் இங்கிலீஷ் பெயர் என்னவோ தெரியாது. ரிச்சர்ட் டால்மேஜ் என்பவர் முக்கியநடிகர். குதிரை சவாரி, சண்டைகள், வீர சாகசங்கள், நிலாக் காட்சிகள் என்று பார்ப்பதற்கு சுவாரசியமாக இருந்தது. பேசாப் படங்கள் (ஊமைப் படங்கள் என்று ஜனங்கள் குறிப்பிட்டார்கள்) என்பதால், படத்தின் கதை பார்ப்பவர்களுக்குப் புரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு, திரையருகே ஒரு ஆள் அமர்ந்து, கதை ஓட்டத்தை நிகழ்ச்சிகளை, பாத்திரங்கள் பேசுவதை எல்லாம், தன் மனம் போக்கில் உரத்த குரலில் விவரித்துக் கொண்டிருப்பான். அந்தக் கதை சொல்லி திருநெல்வேலி வட்டாரத்தில் ட்ரான்ஸ்லேட்டர் நிலைபெற்ற நினைவுகள் 3; 153