பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று குறிப்பிடப்பட்டான். படத்தை முன்னதாகவே பார்த்து அவன் கதை, பேச்சு முதலியவற்றைப் புரிந்து வைத்திருப்பான். படம் பார்ப்போருக்காக அவன் விவரிக்கும் போது, அவன் தனது கற்பனைத் திறத்தையும் கலந்து சுவையாகப் பேகவான். அதோ வாறான் பார் மொட்டைக்கத்தி வீரன், இப்ப குண்டுப் பெருச்சாளி ஒடுறான்... என்டா நிற்கிறே ஏய் அமாவாசை. புளி மூட்டை நடக்க முடியாமல் நடக்கிறான். அடேய், திருப்பூர் பருப்பு மூட்டை ஏன்டா முழிச்சுக்கிட்டு நிக்கிறே? ஒடு ஒடு: இப்படி இஷ்டத்துக்கு அடித்து விடுவான் அந்தக் கதைசொல்லி, அவன் சிறிது நேரம் பேசாமல் ஒய்ந்திருந்தால், படம் பார்க்கிறவர் கள் கத்துவார்கள். ஏய் ட்ரான்ஸ்லேட்டர் கதையை சொல்லு என்று கூச்சலிடுவார்கள். அவன் பேச்சை தொடர்ந்தால் தான் அமைதியாக இருப்பார்கள். -- 'குதிரை வீரன் படம் பார்த்ததற்குப் பிறகு சில வாரங்கள் கழிந்த பின், இந்திப் படம் ஒன்றும் நாங்கள் கண்டுகளித்தோம். படத்தின் பெயர் நினைவில்லை. அந்நாள்களில் இந்தி பேசாப் படங்களில் பெரும்பெயர் பெற்றிருந்த நடிகர்களில் ஒருவரான மாஸ்டர் விட்டல் என்பவரும், நகைச் சுவை நடிகர் கோரியும் நடித்த படம். படங்கள் தொடர்ந்து வந்தன, ஓடின, போயின. ஆயினும் அவற்றில் எதையும் பார்க்கக் கூடிய வாய்ப்பு எங்களுக்குக் கிட்டவில்லை. கால ஓட்டத்தில் படம் பேசலாயிற்று. பேசும் படங்கள் தொடர்ந்து வரலாயின. தமிழிலும் பேசும் படங்கள் தயாரிக்கப் பட்டு வெளிவந்தன. முதல் படம் காளிதாஸ் கூட திருநெல்வேலிக்கு வந்தது. பாளையங்கோட்டையில் டுரிங் டாக்கீஸ் தலைகாட்டியது. கர்சான் மைதானத்தில், டென்ட் அமைத்து, படம் காட்டினார்கள். அங்கு ஒரே ஒரு தடவை, சீனிவாச கல்யாணம் என்ற படம் பார்க்க முடிந்தது. திருநெல்வேலியில் நாடகங்கள் முகாமிட்ட போதும், பாளையங் கோட்டைக்கு சர்க்கஸ் வந்த போதும் பின்னர் சினிமாக்கள் காட்டத் தொடங்கியபோதும் அவற்றை எல்லாம் பற்றி ஜனங்களுக்கு எடுத்துச் சொல்வதற்கு நோட்டீஸ்கள் கொடுக்கப்படுகிற வழக்கம் @@555 குதிரை வண்டியில் சிலர் இருப்பர். பாண்டு வாத்தியத்தை ஒலி எழுப்பிய படி ட்ரம்மில் தட்டி ஓசைப்படுத்தியும், ஊது குழலில் ஒலி 154 38 வல்லிக்கண்ணன்