பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்தும் - கவனத்தைக் கவர்வர். ஒரு ஆள் விதம் விதமான கலர் தாள்களில் அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை கொடுத்தபடி இருப்பான். வண்டியின் பின்னே சிறுவர் சிறுமிகள், சார், சார் எனக்கு நோட்டீஸ் என்று குரல் கொடுத்துக் கொண்டே ஓடுவர். சில சமயம் ஒவ்வொருவர் கையிலும் அந்த ஆள் நோட்டீஸ் கொடுப்பான். சில வேளை அஞ்சாறு தாள்களை கத்தையாக அள்ளி ரோடில் வீசுவான். சிதறி விழும் அவற்றைப் பிடிக்க பிள்ளைகள் போட்டிபோடுவார்கள். இப்படி நோட்டீஸ் வாங்குவதற்காக வண்டி பின்னேயே ஒடும் சிறுவர் கூட்டத்தில் நானும் என் தம்பியும் சேர்ந்து கொள்வோம். வெகுதூரம் ஒடி நிறைய நோட்டீஸ்கள் சேர்த்துக் கொண்டுதான் வீடு திரும்புவோம். . இவ்விதம் சேகரிக்கப்பட்ட பல வர்ணத்தாள்களை பிறகு அளவாக வெட்டி, வளையங்களாக ஒட்டி, பல வளையங்களைக் கோர்த்து நீண்ட சங்கிலியாக அமைப்போம். அண்ணன்களும் சங்கிலி செய்வதில் ஒத்துழைப்பார்கள். அப்படிச் செய்த பல வர்ணக் காகித வளையச் சங்கிலியை அறைச் சுவர்களில் அலங்காரமாக மாட்டி வைப்போம். பொருள்கள் எல்லாம் மலிவாகக் கிடைத்த காலம் அது ஒரு பவுன் விலை பதிமூன்று ரூபாய் தான். நெல்லும் மலிவு தான். ஒரு கோட்டை நெல் பதிமூன்று ரூபாய்க்கு விற்றது. அரிசி ரூபாய்க்கு எட்டுப்படி, பத்துப்படி என்று விற்ற காலம். நாட்டில் நெல் விளையாமல் போன காலங்களில் பிரிட்டிஷ் அரசு பர்மாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்து உதவியது. அருமையான அரிசி ரூபாய்க்கு பத்துப்படி கிடைக்கும். பர்மா அப்போது தனியாகப் பிரிக்கப்படவில்லை. இந்தியாவுடன் இணைந்தே இருந்தது. இந்தியாவை அரசாண்ட பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசம் அது. நான் ஆறாவது பாரம் (எஸ்.எஸ்.எல்.சி) படித்துக்கொண்டிருந்த வருடம் தான் உலகில் யுத்தமேகங்கள் திரள ஆரம்பித்திருந்தன. முசோலினி இத்தாலிய சர்வாதிகாரியாக வளர்ந்திருந்தான். ஜெர்மனியில் ஹிட்லர் சர்வாதிகாரம் பெற்றுக்கொண்டிருந்தான். இத்தாலி ஆப்பிரிக்காவில் உள்ள அபீசினிய நாட்டின் மீது பாய்ந்தது. அங்கு ஹெய்லி சலாசி என்ற ஆப்பிரிக்க மன்னனின் ஆட்சி நடந்தது. முசோலினி, ஹிட்லர், ஹெய்லி சலாசி பற்றி எல்லாம் நிலைபெற்ற நினைவுகள் 3; 155