பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுகம் அவனுக்கு நேர்முரணாக இருந்தான். மனைவியின் போக்கை ஆதரித்தான். அவள் விரும்பியதையெல்லாம் செய்து கொடுத்தான். சிவகாம சுந்தரி ஐந்தாம் வகுப்பு வரை படித்திருந்தாள். மேற்கொண்டு படிக்க ஆசைப்பட்டாள். ஏதோ ஒரு பள்ளிக் கூடத்துக்குப் போய் வந்தாள். சில நாள்களில் தானாகவே நின்று விட்டாள். சிவகாமி என்று தான் அவளை அழைத்தார்கள். சின்னப் பிள்ளைகள் எல்லாம் கேலிபண்ணுது எனக்கே வெட்க மாக இருக்கு என்று அவள் சொன்னாள். பிறகு சங்கீதம் படிக்க விரும்பினாள். அதற்கான ஏற்பாடுகளை அவள் கணவன் செய்து கொடுத்தான். ஒரு பாகவதர் வீட்டுக்குப் போய் கற்றுக் கொள்ளத் தொடங்கினாள் அவள். தினந்தோறும் மாலையில் சீவிச் சிங்காரித்துக் கொண்டு அவள் போய் வருவது பற்றி அண்டை அயலார் இஷ்டம் போல் பேசஆரம்பித்தார்கள். ஆனால் அவள் அதைப்பற்றி சட்டை செய்யாதவளாய், சங்கீதம் கற்கப் போய் வந்து கொண்டிருந்தாள். ஒரு மாதத்திலேயே அவளுக்கு அது அலுத்து விட்டது. பாகவதர் வீட்டுக்குப் போய் வருவதை அவளாகவே நிறுத்திக்கொண்டாள். சங்கீதம் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு புரிஞ்சு போச்சு ஒரு மாதமாகியும் எந்த வித முன்னேற்றமும் இல்லை; பின்னே வீணாக எதுக்குப் போய் கத்துக்கிடணும் தெண்டச் செலவு என்று அவள் சொன்னாள். இப்படி விந்தையான ஒரு கேரக்டர் ஆக நடமாடித் திரிந்தாள் வடக்குவீட்டு சுந்தரி அவளை நாங்கள் அத்தை என்று அழைத்தோம். அவளைப் பற்றிப் பேசும் போது வடக்கு வீட்டு அத்தை என்று குறிப்பிட்டு வந்தோம். வீட்டின் சொந்தக்காரியான உலகம்மாள் எங்களுக்கு உலகுப் பெரியம்மை ஆனாள். அவளும் விநோதமான ஒரு கேரக்டர் தான். ஒரு நாள் அவள் ஒரு புதுமாப்பிள்ளை போட்டோ வந்திருக்கு பாருங்களேன் என்று ஒரு படத்தை எங்களிடம் காட்டினாள். அதில் அவள் தனது கணவன் சட்டை கோட்டு, அங்க வஸ்திரம், வேட்டி, தலைக்குத் தொப்பி எல்லாம் அணிந்து காட்சி தந்தாள். கண்களுக்குக் கண்ணாடியும் அணிந்திருந்தாள். மாப்பிள்ளை எப்படி இருக்காரு என்று கேட்டுச் சிரித்தாள் உலகுப் நிலைபெற்ற நினைவுகள் 159