பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனது நாலாவது வயதில் நாங்கள் கோவில்பட்டி சேர்ந்தோம். ஒட்டப்பிடாரத்தில் வசித்த போது ஒருசமயம் ரயிலில் பயணம் செய்ய நேரிட்டது. ஒட்டப்பிடாரத்தில் ரயிலேறி, தாழை யூத்து ஸ்டேஷன் சேர்ந்து அங்கிருந்து வில்வண்டியில் ராஜவல்லிபுரம் போன பயணம் ஒட்டப்பிடாரத்தில் ரயில் நிலையம் கிடையாது. அந்தக் காலத்தில் பஸ் போக்குவரத்தும் இல்லை. ஒட்டப்பிடாரத்திலிருந்து சில மைல் துரம் தள்ளி உள்ள தட்டப்பாறை ஸ்டேஷன் போய்த்தான் ரயிலேற வேண்டும். - . அவ்விதம் வில்வண்டியில் ஏறி ரயிலடி போனோம். அம்மா, அண்ணன், நான், தம்பி மட்டும் தான் ஊருக்குப் பயணம் எங்களை ரயிலேற்றி வழி அனுப்புவதற்காக அப்பா வந்தார். மணியாச்சியில் வண்டி மாற்ற வேண்டும் தூத்துக்குடியிலிருந்து வந்த ரயிலில் ஏறி, மணியாச்சி ஜங்ஷன் அடைந்து, திருநெல்வேலி போகிற ரயில்வண்டியில் அப்பா எங்களை ஏற்றிவிட்டார். இருட்ட ஆரம்பித்திருந்தது. ஸ்டேஷனிலும், தண்டவாளங்களின் அருகிலும் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் வசீகரக் காட்சிகளாக விளங்கின. வண்டி புறப்படுகிற வரை நின்று அம்மாவிடம் பிள்ளைகளை பத்திரமாக் கூட்டிட்டுப் போ. ஒரு வாரத்திலே நான் வருவேன் என்று கூறி அப்பா விடைபெற்றார். முன்னரே தகவல் சொல்லியிருந்ததால், ராஜவல்லிபுரத்திலிருந்து பெரியப்பா வில்வண்டி அனுப்பியிருந்தார். ராஜவல்லிபுரத்துக்கு தாழையூத்து தான் ரயில்நிலையம் அங்கிருந்து ஊர் இரண்டு மைல் தொலைவில் உள்ளது. வண்ணான் பச்சேரி முக்கு சேர்கிறவரை வெறும் ரஸ்தா தான். ஒரு மைல் துரம், பிறகு ஒரு மைல் குளக்கரைரோடு இருபுறமும் ஓங்கி வளர்ந்து நின்று அடர்ந்த இலைப்பந்தல் இட்டிருந்த பெரிய பெரிய ஆலமரங்கள். ஒரு பக்கம் நீர் நிறைந்த பெரியகுளம், இன்னொரு பக்கம் பசுமையான நெல்பயிர் இனிதாய் காட்சி தரும் வயல்கள். அழகும் குளுமையும் சேர்ந்த சூழல் இதெல்லாம் முன்னொரு காலத்து உண்மை. காலப்போக்கில் 'கனவாய் பழங்கதையாய் போய்விட்ட சமாச்சாரம்: 1 : வல்லிக்கண்ணன்