பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படிப்பதற்காகப் பாளையங்கோட்டையில் வசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்ட காலத்தில், அப்பா உயிரோடிருந்த வருடங்களில் நாங்கள் ராஜவல்லிபுரம் வந்ததில்லை. 1930இல் அப்பா இறந்த போதும் அதற்கு அடுத்த வருடத்திலும்ராஜவல்லிபுரத்துக்கு நாங்கள் வரவில்லை. கணவன் இறந்த முதல் வருடம் - முதலாண்டு முழுவதும் - விதவையாகி விட்ட மனைவி வீட்டை விட்டு வெளியே எங்கும் போகவே கூடாது; வெளியூர் பயணம் அறவே கூடாது என்று மதரீதியான கட்டுப்பாடு இருந்தது. ஆட்டத் திவசம் (முதலாம் ஆண்டுத் திதி) கொடுத்து முடிக்கப்பட்ட பிறகு ஒரு நல்ல நாளில் விதவைப் பெண் திருச்செந்துர் கோயிலுக்குப் போய், கடல்நீராடி, சுவாமி தரிசனம் செய்துவிட்டு வர வேண்டும் அதன் பிறகு தான் அவள் வெளியிடங்கள் மற்றும் வெளியூர்கள் போய்வரலாம். இந்தக் கட்டுப்பாடுகளை சைவவேளாளர் குடும்பப் பெண்கள் தவறாது கடைப்பிடித்து வந்தார்கள். அந்த முதல் ஆண்டு முழுவதும் அவர்கள் பத்திய உணவு உப்பைக் குறைத்து உணவு உண்ண வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகளுக்குட்பட்ட உணவு) உண்டு வாழவேண்டும் என்ற விதியும் இருந்தது. அம்மாவும் அப்படியே கட்டுப்பாடுகள்படி வாழ்ந்து வந்தாள். முதல் ஆண்டுத் திவசத்தை வெகு சிறப்பாகச் செய்து முடித்த பிறகு உறவு முறை பாது ஒருத்தியோடு அம்மா திருச்செந்தூர் போய் வந்தாள். அடுத்த கோடை விடுமறையில் நாங்கள் பாளையங்கோட்டையில் தங்காமல், ராஜவல்லிபுரம் வந்தோம். அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும், பெரியபரீட்சை முடிந்து, இரண்டு மாத விடுமுறை வந்த போது, நாங்கள் ஊருக்கு வந்து தங்குவது ஒரு நியதியாயிற்று. அப்படி வந்து தங்கிய போதெல்லாம், இது இடைக்கால முகாம் தான் நாம் மீண்டும் பாளையங்கோட்டை போய் வசிக்க வேண்டும் படிப்பைத் தொடர வேண்டும் என்கிற ஒரு கட்டாயமும் எதிர்பார்ப்பும் உடன் நிலவியது. ஆனால், 1936 ஏப்ரலில் ராஜவல்லிபுரம் வந்து சேர்ந்த போது, எதிர்காலம் பற்றிய எந்தவிதமான எண்ணமும் கொள்ள முடிந்ததில்லை. இனிமேல் இந்த ஊரில் தான் வசிக்க வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடுதான் இருந்தது. - உயர்நிலைப் பள்ளிப் படிப்பைப் படித்து முடித்தாச்சு மேற் 154 38 வல்லிக்கண்ணன்