பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர் வரும் அதனூடாகப் போய் வீரராகவபுரம் என்கிற திருநெல்வேலி ஜங்ஷனை அடையலாம் பஸ் வசதிகள் ஏற்பட்டிராத அந்நாள்களில் பலரும் ஜங்ஷனுக்கும் டவுணுக்கும் போய் வருவதற்கு ஆற்றங்கரைப் பாதையைத் தான் பயன்படுத்தினார்கள். கிராமங்களிலிருந்து தயிர், மோர், நெய் முதலி யனவற்றை கூடைகளில் வைத்து விற்பனைக்கு எடுத்துச் செல்லும் பெண்கள், கொழுந்து, மரு. செவந்திப் பூ போன்றவற்றை சரமாகக் கட்டி விற்பனை செய்வதற்காக நகரங்களுக்குக் கொண்டு போகிறவர்கள், மற்றும் பல்வேறு அலுவல்கள் மீது செல்கிறவர்கள் என அனைவருக்கும் ஆற்றங்கரைப் பாதை உபயோகமாக இருந்தது. இப்படி நடந்து நடந்து தடம் பட்ட ஒற்றையடிப்பாதை தான் அது மேடுகள் பள்ளங்கள், வளைவுகள் நெளிவுகள் என்று பதிந்து கிடந்தது தடம் செப்டறைக்குப் பிறகு அருவங்குளம் என்கிற நாரணம்மாள் புரம், அனந்த கிருஷ்ணாபுரம் என்று சில ஊர்கள் வரும் இடையிடையே குளுமையான மாந்தோப்புகள் இருக்கும். ஒரு இடத்தில் ஒரு கல் மண்டபமும் படித்துறையும் உண்டு. அந்த இடத்துக்கு ஜடாயு தீர்த்தம் என்று பெயர். அதை ஒட்டிய நீர்ப்பகுதியில் இறங்கி சிறிதுதுரம் நடக்க வேண்டும். அடுத்து மணல் பரப்பு. அதன்பிறகு மீண்டும் ஒற்றையடிப் பாதை இப்படி நடந்து போய் நடந்து திரும்புவது மனோகரமான பயணமாகத் தான் இருந்தது. ஆனந்த விகடன் வாங்குவதற்கான இரண்டனா மட்டுமே எங்களிடம் உண்டு வேறு காசுகள் இரா. அதனால் நிலக்கடலை, பொரிகடலை, காரச்சேவு போன்ற தின்பண்டம் ஏதாவது வாங்கிக் கொரித்தபடி வரலாமே என்று நினைப்பதற்கோ, செயல்புரிவதற்கோ இடமே இருந்ததில்லை. பிற்பகல் ஒரு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டால், ஒரு மணி அல்லது ஒண்னேகால் மணி நேரத்தில் ஜங்ஷன் போய் சேர்ந்து விடலாம். சனிக்கிழமை மத்தியான ரயிலில் தான் சென்னையிலிருந்து விகடன் பார்சல் ஏஜன்டுக்கு வரும் இரண்டரை அல்லது மூன்று மணிக்கு விகடன் வாங்கிக் கொண்டு நடந்தால், நாலு மணி சுமாருக்கு செப்பறை வந்து சேரலாம். அங்கு ஆற்றுமணலில் உட்கார்ந்து கல்கியின் தொடர்கதை அல்லது கதையைப் படிந்து மகிழ்வோம். பிறகு ஆற்றில் நீராடிவிட்டு மெதுவாக ஊர் திரும்புவோம். ஒவ்வொரு வாரமும் இதேபோல் நடந்து, விகடன் வாங்கி வாசித்தோம். நிலைபெற்ற நினைவுகள் 9: 169