பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனந்த விகடனில், அந்நாள்களில், பெங்களுர் சுந்தரம் என்பவர் ஆனந்த ரகசியம் என்ற தலைப்பில் யோகாசனப் பயிற்சி பற்றி எழுதிவந்தார். கட்டுரைகளை சுவையாகவும், நகைச்சுவை கலந்தும், ஆசனங்கள் செய்யும் முறையைத் தெளிவாகவும் விளக்கி எழுதிக் கொண்டிருந்தார். ஆனந்த ரகசியம் கட்டுரைத் தொடர் நிறைவு பெற்றதும், ஆரோக்கிய ரகசியம் என்று உணவுமுறைகள், உடம்பைப் பாதுகாக்கும் வழிகள் பற்றி எல்லாம் எழுதினார். பெங்களுர் சுந்தரம் எழுதிய ஆசனங்கள் செய்யும் முறைகளைப் படித்துப் பலப்பலர் தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் யோகாசனங்கள் செய்வதில் ஈடுபட்டார்கள். ராஜவல்லிபுரத்தில் நாங்கள் மூன்று பேர் யோகாசனம் செய்யலானோம். எங்கள் வீட்டுக்கு அருகே உள்ள வீடுகள் ஒன்றில் சக்தி சங்கர் என்றொருவர் வசித்தார். சங்கர நாராயணன் என்பது அவர் பெயர் மிராசுதார். நிலம் நிறைய இருந்தது. அப்பா இறந்துவிட்டார். அம்மாவும் அவரும் தான். அவர் பத்திரிகைகள் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். மணிக்கொடி இதழ்களைத் தவறாது வாங்கி, படித்துவிட்டு பைண்டு செய்து பாதுகாத்து வந்தார். அந்த இதழ் தொகுதிகளை அவர் எங்களிடம் தந்துவிட்டார். இளைஞர் தான். அவருக்குத் திடீரென்று சக்தி உபாசனையில் நாட்டம் ஏற்பட்டது. தினம் பூஜைகள் செய்து கொண்டிருந்தார். சக்தி தேவியின் பக்தராக மாறியதால் அவர் சக்தி சங்கர் என்று தன் பெயரைக் குறிப்பிடுவது வழக்கம் அண்ணா கோமதிநாயகம், நான், சக்திசங்கர் மூவரும் தினந்தோறும் மாலையில் ஆற்றுக்குப் போய், மணலில் யோகாசனப் பயிற்சி செய்தோம். ஒரு மணிநேரம் ஆசனம் செய்து விட்டு, மணலில் படுத்து ஒய்வு எடுப்போம். இருட்டப் போகிற நேரத்தில், ஆற்றில் குளித்து விட்டுத் திரும்புவோம். காலையில் சக்திசங்கர் அநேகநாள்களில் ஆற்றுக்கு வருவதில்லை. அண்ணாவும் நானும் போவோம். ஆசனங்கள் செய்வோம். ஒய்வுக்குப் பிறகு சுகமாகக் குளித்து விட்டுத் திரும்புவோம். ஆற்றுக்கும் ஊருக்கும் ஒரு மைல் தூரம் இருந்ததால், யாரும் ஆற்றுப் பக்கம் வருவதேயில்லை. கோடைகாலத்தில், ஊர்க் குளத்தில் 170 : வல்லிக்கண்ணன்