பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவை அங்கேயே நின்றன. மகாசபையினர் அமர்ந்து பேசுவதற்கு ஏற்ற ஆசனமாயின. அவை. வண்டிகளை ஒட்டியும், சற்று தள்ளியும் பெரியபெரிய கற்கள் கிடந்தன. சிலர் உட்காருவதற்கு அவையும் பயன்பட்டன. குடும்பத் தலைவர்கள் சிலரும் இந்த வெட்டிப் பேச்சுக் கூட்டத்தில் கலந்து கொள்வது வழக்கம் எல்லோருக்கும் பேசுவதற்குப் பொருள் இருந்தது. பலரைப் பற்றியும் இஷ்டம் போல் பேசி உல்லாசமாகப் பொழுது போக்கிக் களித்தார்கள். கிராம மக்களுக்கு அரசியலிலோ, சமூகப் பிரச்சினைகளிலோ, நாடகம் சினிமா போன்ற கலை விஷயங்களிலோ அக்கறையோ ஆர்வமோ இருந்ததில்லை. வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவது என்ற தன்மையில் அவர்கள் பொழுதுபோக்கினார்கள். நிலம் வைத்திருந்தவர்கள் விவசாயம் பண்ணுகிறோம் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டார்கள். ஆனாலும் அவர்கள் வயல்பக்கம் போவதே அபூர்வம் விவசாயத் தொழிலாளர்களான பள்ளர்களே வயல்வேலைகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டார்கள். அறுவடை நாள்களில் மட்டும் நிலச் சுவான்தார் அறுப்புக்களத்தில் போய் நிற்பார். அறுத்து வந்து சுத்தப் படுத்தப்படும் நெல்லை அளந்து சாக்குகளில் அடைத்து மூட்டைகளைத் தனது வீட்டுக்கு அனுப்பி வைப்பார். அது தான் பண்ணையார்கள் (நிலச்சொந்தக்காரர்கள்) செய்கிற தொழிலாக அமைந்திருந்தது. சிறிதளவு நிலம் வைத்திருப்பவர்கள், பள்ளருக்கு கட்டுக்குத்தகைக்கு வயலை விட்டு விடுவார்கள். உரம் போட்டு, தண்ணிர் பாய்ச்சி, பயிர் நட்டு, பேணி வளர்த்துப் பாடுபடவேண்டிய பொறுப்பு உழைப்பாளர் களைச் சேர்ந்தது. உரிய காலத்தில் பயிர் அறுவடையானதும், கட்டுக்குத்தகை நெல் இவ்வளவு என்று பெரும்பங்கு நெல்லை அளந்து கொடுக்க வேண்டிய கடமையும் அவர்களுக்கு இருந்தது. வண்டி மாடு, பணவசதி முதலியன பெற்றிருந்த ஒருசில வசதி யாளர்கள் சொந்தப் பயிர் வைத்திருப்பதாகச் சொல்வார்கள். சகல செலவுகளையும் அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். வயிலில் இறங்கி அனைத்து விதப் பாடுகளையும் பார்ப்பவர்கள் விவசாயத் தொழி லாளர்கள் தான். நாள் தோறும் பயிருக்குத் தண்ணிர் பாய்ச்சுவது முதலி ய சகல வேலைகளையும் அவர்களே செய்வார்கள். நிலஉடைமையாளர் 172 : வல்லிக்கண்ணன்