பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேர் அடிக்கடி எங்கள் ஊருக்கு வருவார்கள். அறையிலும் முச்சந்திக் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசிப்பொழுது போக்குவார்கள். கதைகள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்களும் கூட அவர்களில் ஒருவர் சொன்னார் கதைகள் கட்டுரைகள் எழுதுவது என்பது கம்மா விளையாட்டு மாதிரி இல்லை. எல்லாராலும் எழுதிவிட முடியாது. அதிலும் நம்மைப் போன்றவர்களுக்கெல்லாம் கதை எழுதவராது. இப்ப எழுதும் போது நல்லா இருக்கிற மாதிரித் தான் தோணும். ஆனால் அதை அப்படியே வைத்திருந்து, ஆறேழு மாசம் கழிச்சு எடுத்துப் படிச்சுப் பார்த்தா, நமக்கே அது பிடிக்காது. சுத்த மோசமாக இருக்குதேன்னு கிழிச்சுப் போடத்தான் தோனும் எழுதுகிறது என்பது லேசுப்பட்ட காரியமா! அதெல்லாம் ஒரு கிஃப்ட் (கொடுப்பினை - பேறு) என்று உரத்த குரலில் அடித்துப் பேசினார். அவருடைய பேச்சு என்னை பாதிக்கவில்லை. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல எழுத்தும் எழுதி எழுதிப் பயிற்சி பெற்றால் நன்றாக வந்துவிடும் என்று என் உள்ளத்தில் உறுதி படிந்திருந்தது. அத்துடன் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை எழுதிப் பத்திரிகை யில் வெளிவந்திருந்த ஊன்றி உணர்தற்குரிய உண்மைகள் என்ற பாடலின் சில வரிகள் என் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்திருந்தன. இடையறாது ஒலித்துக் கொண்டிருந்தன. 'உள்ளந்தேறிச் செய்வினையில் ஊக்கம் பெருக உழைப்போமேல் பள்ளம் உயர் மேடாகாதோ? பாறை பொடியாய் போகாதோ? என்ற உண்மை எனக்குள் ஒரு உந்துசக்தியாக இயங்கிக் கொண்டே யிருந்தது. ஆகவே நான் எழுதிக் கொண்டேயிருந்தேன். எழுதியதைவிட அதிகமாகப் படித்தேன். மணிக்கொடி இதழ்களில் இடம்பெற்றிருந்த முக்கியமான கதைகளை - சிறப்பாகப் புதுமைப்பித்தன் கதைகளை திரும்பத் திரும்பப் படித்தேன். இவை போன்ற சிறுகதைகளை நானும் எழுதவேண்டும் என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். அண்ணாச்சி ராஜகோபாலகிருஷ்ணன் அரசியல்வாதிகள், அரசு அலுவலகர்கள், பலவகை வியாபாரிகள் என்று பல்வேறு நிலைபெற்ற நினைவுகள் 3 177