பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் நடத்திய கப்பிரமணிய பாரதியார் கவிதா மண்டலம் தான் நவீன தமிழில் முதலாவதாகத் தோன்றிய கவிதை இதழாகும் அது முழுக்க முழுக்க கவிதைகளையே கொண்டிருந்தது. விளம்பரங்கள், நூல் மதிப்புரைகள் கூட கவிதையிலேயே எழுதப்பட்டிருந்தன. பாரதி தாசனின் கவிதைகள் அதிகம் வெளிவந்தன. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதைகள் கூட அதில் பிரசுரம் பெற்றிருந்தன. சிறப்பான இதழாகத்தான் அது அமைந்திருந்தது. ஆயினும் கவிதாமண்டலம் ஒருசில இதழ்களே வெளிவந்தது. பின் நின்று விட்டது. புதிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் தொண்டாற்றிய வ.வெ. சு. ஐயர் நடத்திய பாலபாரதி தேசபக்தியையும், இளைஞர்க்கு வீர உணர்வையும் ஊட்டுவதிலும் கவனம் செலுத்தியது. சிறுகதையில் சோதனை ரீதியான முயற்சிகளில் ஈடுபட்ட ஐயர், தமிழில் இலக்கிய விமர்சனம் எழுதுவதிலும் அக்கறை காட்டினார். சந்திரகுப்தன் கடிதங்கள் என்ற தலைப்பில் கிரேக்க வீரர்கள், பாரத நாட்டின் வீர திலகங்கள் பற்றியெல்லாம் உணர்ச்சியோடு கட்டுரைகள் எழுதினார். பாலபாரதியின் ஒருசில இதழ்களே எங்களுக்குப் படிக்கக் கிடைத்திருந்தன. சோமயாஜலுதந்த பத்திரிகைகளில் மெரிமேகசின் என்ற ஆங்கிலப் பத்திரிகையின் சில இதழ்களும் இருந்தன. ஆனந்த விகடன் காரியாலயத் திலிருந்து, எஸ். எஸ். வாசன் வெளியிட்ட் ஆங்கில இதழ் அது. அந்நாள்களில், சென்னையிலிருந்து வெளிவந்த மை மேக சின் வெற்றிகரமாக நடந்தது. அதைப் போல தாமும் ஒரு ஆங்கிலப் பத்திரிகை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு வாசன் மெரி மேகசின் தொடங்கியிருந்தார். அச்சு அமைப்பு, நகைச்சுவைக் கதைகள் கட்டுரைகள் முதலியவற்றில் மெரி மேகசின், மை மேகசினை விட, வசீகரமாக நன்றாகவே இருந்தது. பெரிய பெரிய சித்திரங்கள் பத்திரிகை யின் பக்கங்களை அழகுபடுத்தின. கதைகளும் தொடர்கதைகளும் தேவி தி டான்சர், பாலா தி பேட் வுமன் போன்ற கவர்ச்சித் தலைப்பு களுடன் சுவையாகவே இருந்தன. ஆயினும் மெரி மேகசின் சந்தையில் எடுபடவில்லை. விரைவிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. மை மேகசின் இடைவிடாது, நீண்டகாலம் தொடர்ந்து வெளிவந்தது. இப்படியாக சின்னவயதிலேயே எனக்கு சிற்றிதழ்களின் மீது தனி ஆர்வம் ஏற்பட்டு வளரலாயிற்று. நிலைபெற்ற நினைவுகள் : 179